செம டேஸ்டான ஆப்பிள் பாயாசம்… இத சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்!!!

30 April 2021, 5:30 pm
Quick Share

நீரிழிவு நோயாளியாக ஒரு கஷ்டமான காரியம் தான். நமக்கு பிடித்தமான உணவுகளை ஆசையாக சாப்பிட முடியாது. ஆனால் இதனை உங்கள் நலனுக்காகவே செய்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் உணவைக் கட்டுப்படுத்துவது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான வழியாகும்.

ஆனால் எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போது நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய ஒரு ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி உள்ளது. அது தான் ஆப்பிள் பாயாசம். இப்போது ஆப்பிள் பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

* 1 கப் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள்

* 1 கப் தண்ணீர்

* 2-3 தேக்கரண்டி தேங்காய் சர்க்கரை

* 2 கப் குறைந்த கொழுப்பு பால்

* தோராயமாக நறுக்கப்பட்ட சில பேரிச்சம் பழங்கள்

* 1/2 கப் பாலில் கலக்கப்பட்ட இரண்டு தேக்கரண்டி சோள மாவு

* அழகுபடுத்த பாதாம் / அக்ரூட் பருப்புகள்

செய்முறை: 

* முதலில் ஒரு பாத்திரத்தில் ஆப்பிள், தேங்காய் சர்க்கரை மற்றும் தண்ணீரை எடுத்து, மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். 

* இது சுமார் 4-5 நிமிடங்கள் இருக்கட்டும். 

* ஆப்பிள்கள் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.

* இப்போது இந்த கலவையை ஆற வையுங்கள். 

* இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். 

* அதனை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.

* பால் ஒரு கொதி வந்ததும், சோள மாவு கலவையைச் சேர்க்கவும். 

* அதே நேரத்தில் எந்தக் கட்டிகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து கிளறவும்.

* இந்த கட்டத்தின் போது, ​​பேரிச்சம் பழங்களைச் சேர்த்து, மேலும் ஐந்து நிமிடங்களுக்கு சமைக்கவும், தொடர்ந்து கிளறி விடுங்கள்.

* இதை ஆற விடவும்.

இந்த கலவை குளிர்ந்ததும், ஆப்பிள் கலவையை அதில் சேர்க்கவும்.

* நறுக்கிய அக்ரூட் பருப்புகள், பாதாம் பருப்பு  ஆகியவற்றுடன் அலங்கரிக்கவும்.

Views: - 114

0

0

Leave a Reply