முட்டையை இப்படி ஒரு அசத்தலான காலை உணவா… செய்வதற்கு நீங்க ரெடியா…???

31 March 2021, 11:30 am
Quick Share

வழக்கமான காலை எப்போதும் போர் அடித்து விடும். நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். இந்த ரெசிபியை நாம் எளிதில் செய்து விடலாம். முட்டையை வைத்து ஒரு அருமையான காலை உணவை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
3 தேக்கரண்டி – வெண்ணெய்
2 தேக்கரண்டி- எண்ணெய்
6-8 – காளான்கள்
1 -வெங்காயம்
1/4 தேக்கரண்டி – சில்லி ஃபிளேக்ஸ்
5-6 – வேக வைத்த சிக்கன்
5-6 – செர்ரி தக்காளி
50 கிராம் – மொஸரெல்லா சீஸ்
தேவையான அளவு கருப்பு மிளகுத்தூள்
5-6 – துளசி இலைகள்
¼ கப் – மைதா மாவு
6 – முட்டை

செய்முறை:

  • ஒரு கடாயில் வெண்ணெயை சூடாக்கவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பின்னர் காளான்களை சேர்க்கவும். காளான் நன்கு வெந்ததும் அதனை தனியாக வைக்கவும்.
  • இப்போது அதே கடாயில் மீண்டும் சிறிது எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  • சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அடுத்து வேக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி பின்னர் நன்கு ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில், செர்ரி தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனோடு மொஸெரெல்லா சீஸ், கருப்பு மிளகுத்தூள் மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
  • மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, சிறிது வெண்ணெய் சேர்க்கவும். முட்டைகளைச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  • ஒரு மஃபின் (muffin) அச்சு தட்டில், சிக்கன் துண்டுகள், செர்ரி தக்காளி கலவை மற்றும் காளான்களை ஒவ்வொரு தட்டிலும் தனித்தனியாக வைக்கவும். இப்போது அவை ஒவ்வொன்றின் மேலும் முட்டை கலவையை ஊற்றவும்.
  • 180 டிகிரி செல்சியஸில் 10-12 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள்.

*அவ்வளவு தான்… முட்டை மஃபின்கள் தயாராக உள்ளன.

Views: - 1

0

0