பாலக் பன்னீர் ரெசிபி: சூடான சப்பாத்திக்கு அருமையான காம்பினேஷன்!!!

21 April 2021, 5:45 pm
Quick Share

மென்மையான மற்றும் சூடான சப்பாத்தியுடன்  வெண்ணெய் தாராளமாக பயன்படுத்தப்பட்ட பாலக் பன்னீர் சாப்பிடுவது ஒரு தனி ருசி தான். இதில்  கீரை மற்றும் பன்னீர் உள்ளதால் மிகவும் ஆரோக்கியமானதும் கூட.  இது ஒரு வட இந்திய உணவாகும். இது அதிக சத்தான மற்றும் சுவையாக இருக்கும்.  

இது பலவிதமான மசாலாப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் இது இரத்தத்தை சுத்திகரிக்கிறது என்றும் கூறப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானது. எனவே, இந்த சுவையான உணவை ஈசியாக எப்படி செய்வது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செய்முறை: 

* கீரை இலைகளை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்கு சுத்தம் செய்து   குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த இலைகளை ஒரு  பேஸ்டாக அரைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்க்கவும். அதை வதக்கி 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.

* தக்காளி நன்கு வெந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.

* இப்போது, சிறிது உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்  சேர்க்கவும். பின்னர் நாம் அரைத்து வைத்த கீரை கூழ் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

* இந்த சமயத்தில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.2 நிமிடங்கள் சமைத்து,  சூடாகவும் பரிமாறவும்.

Views: - 31

0

0