அசத்தலான மொறு மொறு பீட்ரூட் தினை தோசை… ஆரோக்கியமானதும் கூட!!!

19 April 2021, 3:08 pm
Quick Share

COVID வழக்குகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் தலைமையகமாக செயல்படுவது நமது குடல் ஆகும். நமது குடலில் உள்ள பாக்டீரியா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமது நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாகிறது. எனவே உங்கள் குடல் பாக்டீரியாக்களுக்கு பிடித்தமான உணவுகளை எடுப்பது அவசியம். குடல் பாக்டீரியாக்களை சந்தோஷப்படுத்த நாம் அதிகம் கரையக்கூடிய நார்ச்சத்து எடுப்பது முக்கியம். ​

நார்ச்சத்து நிரம்பிய தினை வகை உணவுகளை நீங்கள் முயற்சி செய்யலாம். இதில் நார்ச்சத்து மட்டும் இல்லாமல் பல விதமான  வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், புரதங்கள் ஆகியவையும் உள்ளன. மேலும் பைட்டோ கெமிக்கல்களிலும் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான ஆக்ஸிஜனேற்றிகளை உங்களுக்கு வழங்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி நார்ச்சத்து மற்றும் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது  உங்கள் குடல் பாக்டீரியாவை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது பீட்ரூட் தினை தோசை.   

தேவையான பொருட்கள்:

1 கப் தினை

½ கப் முழு பாசிப்பருப்பு 

1 துண்டு இஞ்சி

2 தேக்கரண்டி வெந்தயம்

ருசிக்கேற்ப கல் உப்பு

மேலே தூவுவதற்கு: 

பீட்ரூட்

கறிவேப்பிலை 

குடை மிளகாய்

புதினா 

செய்முறை:

தினையை நன்கு கழுவி 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதே போல நன்கு கழுவிய முழு பாசிப்பருப்பையும் 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயம் விதைகளை ஊற  வைத்து கொள்ளவும். ஊற வைத்த 

தினை, பாசிப்பருப்பு, வெந்தய விதைகள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். 

இந்த மாவை  7-8 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி மாவு ஊற்றி தோசையை விரிக்கவும். இதன் மீது பொடியாக நறுக்கிய காய்கறிகளை தூவவும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கத்திலும் வேக வைக்கவும். அவ்வளவு தான்… மொறு மொறு பீட்ரூட் தினை தோசை தயார்.

Views: - 22

0

0