செம டேஸ்டான பிரவுன் பிரெட் பொரியல்!!!
26 January 2021, 7:21 pmபிரெட் வைத்து ஏராளமான வகை உணவுகளை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வித்தியாசமான பிரெட் பொரியல். காய்கறி இல்லாத சமயத்தில் இந்த சைடு டிஷ்ஷை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம். இப்போது பிரெட் பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
பிரவுன் பிரெட்- 3
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
தக்காளி- 1
கொத்தமல்லி தழை- சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி
உப்பு- சுவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ்- ஒரு தேக்கரண்டி
முட்டை- 3
எண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
*பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
*ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை, சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
*அடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும்.
*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும்.
*இப்போது முட்டை கலவையில் பிரெட் துண்டுகளை போட்டு கலந்து அதனை கடாயில் ஊற்றவும்.
*அடுப்பில் ஹையில் வைத்து முட்டையை வேக வைக்கவும்.
*இப்போது நமது வித்தியாசமான பிரெட் பொரியல் தயார்.
0
0