கேழ்வரகு வைத்து இத்தனை சுவையான அல்வா செய்ய முடியுமா???

23 January 2021, 5:41 pm
Quick Share

கேழ்வரகு ஒரு ஆரோக்கியமான தானியமாகும். இது உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. கேழ்வரகு வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம். இன்று நாம் கேழ்வரகு அல்வா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…   

தேவையான பொருட்கள்: 

1 கப் கேழ்வரகு மாவு 

4 தேக்கரண்டி நெய் 

1 ½ கப் சூடான பால் 

1/2 கப் சர்க்கரை 

ஏலக்காய் தூள் 

5-6 பாதாம் 

5-6 முந்திரி 

7-8 உலர்ந்த திராட்சை  

செய்முறை: 

ஒரு கடாயை எடுத்து அதில் 3 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். நெய் முழுவதுமாக உருகியதும், அதில் 1 கப் கேழ்வரகு  மாவு சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 4 நிமிடங்கள் மாவை  கிளறவும். கலவையில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அடுப்பை  அணைத்து, கலவையில் சூடான பால் சேர்க்கவும். நீங்கள் பாலை ஒரேடியாக  சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.  நீங்கள் பாலைச் சேர்க்கும்போது, ​​மாவில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து கலவையை  கிளறவும். மாவு கெட்டியாகும் வரை கிளறவும். இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து குறைந்த தீயில் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். மாவு கடாயில் ஒட்டாமல் வரும்வரை கலவையை கிளறவும். இப்போது அடுப்பை அணைத்து, ஹல்வாவை 2-3 நிமிடங்கள் அப்படியே  வைக்கவும். இதற்குப் பிறகு, பாதாம், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து ஹல்வாவை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Views: - 0

0

0