பாகற்காய் வெறுப்பவர்களையும் சாப்பிட வைக்க மொறு மொறு பாகற்காய் சிப்ஸ்!!!

28 September 2020, 6:12 pm
Quick Share

பாகற்காய் என்றாலே பொதுவாக பலரும் அலறி ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த பாகற்காய் குணப்படுத்தாத நோயே இல்லை என கூறலாம். அப்படிப்பட்ட நன்மைகள் அடங்கிய  பாகற்காயை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபியை இன்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

பாகற்காய்- 3

மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

கடலை மாவு- 4 தேக்கரண்டி

அரிசி மாவு- 2 தேக்கரண்டி

உப்பு- ஒரு தேக்கரண்டி

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பாகற்காய் சிப்ஸ் செய்வதற்கு முதலில் மூன்று பாகற்காய் எடுத்து ஓரங்களை வெட்டி விட்டு, மெலிசாக வட்ட வடிவில் வெட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளலாம். 

ஊற வைத்த பாகற்காயை மூன்று முதல் நான்கு முறை தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளுங்கள். இதனோடு ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், நான்கு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து வையுங்கள். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பாகற்காயை போடவும். அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு போட்டு கொள்ளவும். பாகற்காய் அனைத்தும் பொன்னிறமாக மாறி மொறு மொறுவென்று வந்ததும் எடுத்து விடலாம். சூடான பாகற்காய் சிப்ஸ் தயார். 

Views: - 0 View

0

0