காரக்குழம்பிற்கு இத விட ஒரு அட்டகாசமான சைட் டிஷ் இருக்கவே முடியாதுப்பா…!!!

9 November 2020, 10:17 pm
Quick Share

பொதுவாக சாம்பார் சாதத்திற்கு எந்த தொட்டுக்கை செய்தாலும் செட் ஆகி விடும். ஆனால் காரக் குழம்பு, வத்தக் குழம்பு போன்ற காரசாரமான குழம்புகளுக்கு என்ன தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நாம் அதிகம் யோசிக்க வேண்டி இருக்கும். உங்கள் கவலையை போக்க ஒரு அற்புதமான முள்ளங்கி கூட்டு செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். இதன் விசேஷம் என்னவென்றால் இந்த கூட்டு சப்பாத்திக்கு கூட அருமையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி- 3

பாசிப்பருப்பு- 1/2 கப்

மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- ஒரு துண்டு

துருவிய தேங்காய்- ஒரு தேக்கரண்டி

நெய்- ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

முள்ளங்கியை தோல் சீவி அதனை நறுக்கி ஒரு குக்கரில் போட்டு வைத்து கொள்ளுங்கள். இதனோடு மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சுத்தம் செய்து அலசிய பாசிப்பருப்பு, 1 1/2 கப் தண்ணீர் ஆகியவை சேர்த்து மூன்று விசில் வர விடுங்கள். 

இப்போது ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, பெருங்காய தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் இரண்டு வர மிளகாய் சேர்க்கவும். அடுத்ததாக வேக வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து கொள்ளுங்கள். இதனோடு தேவையான அளவு உப்பு மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். 

தண்ணீர் ஓரளவு சுண்டி பொருட்களின் பச்சை வாசனை போன பிறகு தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடலாம். வித்தியாசமான முறையில் ருசியான முள்ளங்கி கூட்டு இப்போது தயார். 

Views: - 24

0

0