அடுத்த முறை கேரட் வாங்கினால் இப்படி ஒரு கூட்டு செய்து பாருங்கள்!!!

16 January 2021, 4:00 pm
Quick Share

பொதுவாக குழந்தைகளை  காய்கறி சாப்பிட வைப்பதே ஒரு பெரிய வேலை தான். ஆனால் வித்தியாசமாகவும் அதே சமயம் சுவையாகவும் செய்தால் நிச்சயமாக அவர்களே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சாம்பார் சாதம், வெரைட்டி ரைஸ், தயிர் சாதத்திற்கு செம காம்பினேஷனாக இருக்கக்கூடிய கேரட் பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு- ஒரு தேக்கரண்டி

பாசிப்பருப்பு- ஒரு தேக்கரண்டி 

கடுகு- 1/4 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி

சீரகம்- 3/4 தேக்கரண்டி

பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

வெங்காயம்- 1

பச்சை மிளகாய்- 1

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பூண்டு- 2 பல்

கேரட்- 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

தேங்காய் துருவல்- ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கேரட் பொரியல் செய்ய முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் சுத்தம் செய்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளுங்கள். இப்போது கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காய தூள் சேர்க்கவும். அடுத்து ஒரு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பூண்டை தட்டி சேர்த்து கொள்ளவும். பிறகு துருவிய கேரட், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கேரட் வேக சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சேர்க்கவும். 

கடைசியாக வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் அடுப்பை அணைத்து விடலாம். சுவையான கேரட் பொரியல் தயார்.

Views: - 3

0

0