குளிர்காலத்தை இந்த முட்டையில்லா பட்டர்ஸ்காட்ச் புட்டிங் கொண்டு கொண்டாடுங்கள்…!!!

1 December 2020, 9:32 am
Quick Share

குளிர்காலத்தைப் பற்றிய சிறந்த விஷயங்களில் ஒன்று, இது நம் பசியை அதிகரிக்கச் செய்கிறது. குளிர்காலத்தில் பல உணவு விருப்பங்கள் உள்ளன. அவற்றில் இனிப்பு வகைகள் உள்ளன. நீங்கள் இன்று இனிமையான ஒன்றிற்காக ஏங்குகிறீர்கள் என்றால், வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபியை இந்த பதிவில் காண்போம்.  

தேவையான பொருட்கள்:

புட்டிங் பேஸிற்கு 

– ½ கப் பழுப்பு சர்க்கரை (brown sugar)

– ¼ கப் வெண்ணெய் 

– 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் 

– ½ கப் சூடான கிரீம் 

– 1 + ½ கப் சூடான பால் 

– 5 தேக்கரண்டி சோள மாவு

கேரமல் செய்யப்பட்ட முந்திரிக்கு 

– ¼ கப் முந்திரி 

– ¼ கப் கிரானுலேட்டட் சர்க்கரை 

– 1 தேக்கரண்டி தண்ணீர் 

செய்முறை: 

* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். அதில் பழுப்பு சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். அவை முழுவதுமாக உருகி கலவையாக மாறும் வரை இரண்டையும் ஒன்றாக சமைக்கவும். 

* இந்த கலவையில், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். 

* அடுத்து, நீங்கள் சூடான கிரீம் சேர்க்க வேண்டும். இதற்காக, நீங்கள் ஒரு மைக்ரோவேவில் தனித்தனியாக கிரீமை  சூடாக்கலாம். பின்னர் அதை கலவையில் சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டு வரலாம்.  

* இப்போது பட்டர்ஸ்காட்ச் சாஸ் தயார். நீங்கள் அதை அடுப்பில் இருந்து எடுத்து  சிறிது நேரம் ஆற வையுங்கள். 

* இதற்கிடையில், ஒரு தனி பெரிய கிண்ணத்தில், நீங்கள் சூடான பால் மற்றும் சோள மாவை சேர்த்து பிசையவும். கலவையில் கட்டிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

* இப்போது நீங்கள் பட்டர்ஸ்காட்ச் சாஸ் தயாரித்து வைத்த பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைக்கவும். இப்போது நீங்கள் சூடான பால் மற்றும் சோள மாவு கலவையை சேர்க்கலாம். அது ஒரு கொதி வந்து கெட்டியாகும் வரை சமைக்கவும். ஒரு கரண்டி  கொண்டு கிளறிக்கொண்டே இருங்கள். 

* அடுத்து, ஒரு வாணலியில்  தண்ணீர் ஊற்றி ¼ கப் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சில முந்திரி பருப்புகளை கேரமல் செய்யுங்கள். சர்க்கரை உருகி கேரமல் ஆகும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்கவும். 

* இது குளிர்ந்து கடினமாக்கட்டும். 

* கடினமாகிவிட்டால், அவற்றை நன்றாக நசுக்கி, பின்னர் பட்டர்ஸ்காட்ச் சாஸில் சேர்க்கவும். அவற்றை நன்றாக கலக்கவும். 

* கலவையை இரண்டு கண்ணாடி கிளாஸ்களில்  ஊற்றவும். நீங்கள் அலங்கரித்து புட்டிங்கை  பரிமாறும் முன் சுமார் 30 நிமிடங்கள் அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

Views: - 17

0

0