அசற வைக்கும் சுவையில் கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்!!!
8 February 2021, 1:07 pmஇறைச்சியைப் பொறுத்தவரை பலரது ஃபேவரெட் சிக்கனாக தான் இருக்கும். சிக்கன் வைத்து வித விதமான உணவுகளை சமைக்கலாம். இன்று நாம் பார்க்க இருப்பது மிகவும் வித்தியாசமான சுவையில் கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட். இதனை ரசம் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் கூட அட்டகாசமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இது இருக்கும். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி தழை – 3/4 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
*கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் செய்ய முதலில் நாம் சிக்கனை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
*கழுவிய சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனோடு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
*இதனை ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளலாம்.
*சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும்.
*எண்ணெய் சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைவான தீயில் சமைக்கவும்.
*சிக்கனை அடிப்பிடிக்காமல் வேக வையுங்கள். அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
*சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.
*அவ்வளவு தான்… ருசியான கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் தயார்.
0
0