தனித்துவமான ருசியில் மொறு மொறு அவல் வடை!!!

27 February 2021, 7:30 pm
Quick Share

கடலைப்பருப்பு வடை, உளுந்து வடை, வாழைப்பூ வடை ஆகியவற்றை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் அவல் வடை செய்து சாப்பிட்டு இருக்கீங்களா… இது வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருக்கும். மாலை டீ, காபியுடன் இந்த அவல் வடையை ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். இப்போது அவல் வடை எப்படி செய்வது என  பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்

கடலை மாவு – 2 தேக்கரண்டி

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

சீரகம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

கருவேப்பிளை- ஒரு கொத்து 

கொத்தமல்லி தழை – சிறிதளவு

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

*அவல் வடை செய்வதற்கு முதலில் வெள்ளை அவலை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

*உங்களிடம் சிவப்பு அவல் இருந்தால் அதனையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

*அவல் அரை மணி நேரம் ஊறியதும் அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி அவலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். 

*ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற வைத்த அவல், கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சீரகம், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வடையை பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்த பின் கலவையில் இருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து அதனை வடையாக தட்டி எண்ணெயில் போடவும்.

*இருபுறமும் பொன்னிறமாக மொறு மொறுவென்று வெந்ததும் வடையை வெளியே எடுத்து விடலாம்.

*அவ்வளவு தான்… மிகவும் ருசியான மொறு மொறு அவல் வடை தயார்.

Views: - 17

0

0