பார்த்தவுடனே சாப்பிட தூண்டும் மொறு மொறு மட்டன் வடை!!!

Author: Poorni
27 March 2021, 10:16 am
Quick Share

அசைவ பிரியர்களின் ஃபேவரெட்டான விஷயத்தில் மட்டனுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. இந்த மட்டனை வைத்து என்றைக்காவது வடை செய்துள்ளீர்களா…? ஆம், மட்டன் வடை ஒரு ருசியான ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும். இது செய்வதற்கு எளிதானது. இதனை  வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். இப்போது மட்டன் வடை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

செய்முறை:

*மட்டன் வடை செய்வதற்கு முதலில் 1 கப் கடலைப்  பருப்பை 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில்  வைக்கவும். 

*இதனோடு நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள், ½ தேக்கரண்டி சீரகம், கருப்பு மிளகு தூள், ஏலக்காய் தூள் மற்றும் கிராம்பு சேர்க்கவும்.

*அடுத்ததாக 500 கிராம் துண்டு துண்தாக வெட்டப்பட்ட மட்டனை எடுத்து நன்கு கழுவி நாம் தயார் செய்து வைத்த  கலவையில் சேர்க்கவும். 

*5 கப் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஒரு கொதிக்க வைக்கவும். மட்டன் நன்றாக வேகும் வரை இது கொதிக்கட்டும். 

*மட்டன் வெந்ததும் இந்த கலவையை அரைக்கவும். அரைத்த கலவையில், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

*மற்றொரு பாத்திரத்தில், ஒரு முட்டையை எடுத்து, முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு சரியாக கலக்கும் வரை அடித்து, பின்னர் அதை கலவையில் சேர்க்கவும். மாவிலிருந்து சிறிய அளவுகளை எடுத்து  பந்துகளை உருவாக்கி அவற்றை உங்கள் கைகளால் வடையாக  தட்டவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெயை அதிக தீயில் சூடாக்கி, வடையை போட்டு பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி சட்னி மற்றும்  வெங்காய  பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

Views: - 85

1

0