இந்த வாரம் சிக்கன் எடுத்தால் கண்டிப்பாக சிக்கன் சூப் ரெசிபி டிரை பண்ணுங்க!!!
6 March 2021, 9:53 amசூப் ஒரு அற்புதமான உணவு. இது சூடான, ஆறுதலளிக்கும், ஊட்டமளிக்கும் மற்றும் சுவையாக இருக்கும். இதனை தயாரிக்க பெரிதாக கஷ்டப்பட தேவையில்லை. சில நிமிடங்களிலே செய்து விட முடியும். சிக்கன் சூப் மிகக் குறைவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நம் வீட்டிலே எளிய முறையில் சிக்கன் சூப் செய்யலாம். இப்போது சிக்கன் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
செய்முறை:
*சிக்கன் சூப் செய்வதற்கு முதலில் 2 வெங்காயம், 3-4 செலரி குச்சிகள், 2 கேரட், 1 காலிஃபிளவர் மற்றும் 2 உருளைக்கிழங்கை கழுவி பொடியாக நறுக்கவும். 2 பல் பூண்டு மற்றும் ½ அங்குல இஞ்சியையும் நறுக்கி கொள்ளவும்.
*250 கிராம் எலும்பு இல்லாத கோழியை எடுத்து துண்டுகளாக நறுக்கவும்.
*ஒரு குக்கர் எடுத்து நறுக்கிய காய்கறிகள், ஒரு கப் இனிப்பு சோளம் மற்றும் கோழி துண்டுகளை சேர்க்கவும்.
*2-3 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 பிரியாணி இலை மற்றும் இலவங்கப்பட்டை குச்சி சேர்க்கவும்.
*இதனோடு 3 கப் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை 2 விசில் வரும் வரை சமைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும். நடுத்தர வெப்பத்தில் இவற்றை 2 நிமிடங்கள் வதக்கவும்.
*இதில் காய்கறிகள் மற்றும் சோளம் சேர்க்கவும். காய்கறிகள் மற்றும் கோழி சமைத்த தண்ணீரை வடிகட்டி வாணலியில் ஊற்றவும். காய்கறிகள் மென்மையாகும் வரை 2-3 நிமிடங்கள் மூடி போட்டு சமைக்கவும்.
*வேக வைத்த சிக்கன் துண்டுகள், சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். மிதமான தீயில் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
*கடைசியில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து சூடாக பரிமாறவும்.
0
0