ஒரே ஒரு ஆப்பிள் இருந்தால் போதும்… வாயில் எச்சில் ஊற செய்யும் டேஸ்டான, ஆரோக்கியமான அல்வா தயார்!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2021, 11:52 am
Quick Share

அல்வா என்றாலே வாயில் எச்சில் தான் ஊறும். கோதுமை அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான ஆப்பிள் அல்வா. இது சுவையில் அட்டகாசமாக இருப்பதோடு ஆரோக்கியமானதும் கூட. இப்போது ஆப்பிள் அல்வா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
ஆப்பிள்- 1
சோள மாவு- 4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி- 1/2 தேக்கரண்டி
சர்க்கரை- 3/4- 1 கப்
நெய்- 1/4 கப்
முந்திரி பருப்பு- 10

செய்முறை:
*ஆப்பிள் அல்வா செய்வதற்கு முதலில் ஒரு ஆப்பிளை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நெய் விடவும்.

*நெய் உருகியதும் அதில் முந்திரி பருப்பை போட்டு அதனை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*அதே கடாயில் அரைத்து வைத்த ஆப்பிளை சேர்த்து கிளறவும்.

*கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருங்கள்.

*பத்து நிமிடங்கள் இவ்வாறு கிளறிய பின் அதில் நான்கு தேக்கரண்டி சோள மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

*மீண்டும் நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

*நன்றாக திரண்டு வரும்போது தேவையான அளவு சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.

*அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.

*தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்து கொள்ளலாம்.

*அல்வா கடாயில் ஒட்டாமல் வருவது தான் சரியான பதம்.

*இவ்வாறு வந்தவுடன் வறுத்து வைத்த முந்திரி பருப்பை போட்டு அடுப்பை அணைத்தால் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.

Views: - 319

0

0