உங்கள் காலை சிற்றுண்டியை ஆரோக்கியமாக மாற்ற ருசியான கேழ்வரகு பனியாரம்!!!

20 August 2020, 11:37 am
Quick Share

ஒரு ஆரோக்கியமான உணவோடு நமது நாளை  தொடங்குவதை தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.  அதனால்தான் ஆரோக்கியமான காலை உணவு வகைகளை உண்டு வருகிறோம். இருப்பினும் ஒரே மாதிரியான உணவுகளை உட்கொள்வது ஒரு வித சலிப்பை ஏற்படுத்தும். 

எனவே நமது காலை சிற்றுண்டியை சுவாரஸ்யமாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் ஒரு உணவு வகையை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.   கேழ்வரகு மாவை  பயன்படுத்தி நிறைய சமையல் வகைகளைத் தயாரிக்க முடியாது என்று பலர் நினைக்கும் அதே வேளையில், இந்த வித்தியாசமான ரெசிபியை  எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு- 1 கப்

ரவை- ¼ கப்

அரிசி மாவு- ¼ கப்

தயிர்- ½ கப்

சுவைக்கு ஏற்ப உப்பு 

கேரட்- 1

பச்சை மிளகாய்- 4 

வெங்காயம்- 2

கொத்தமல்லி- சிறிதளவு

தக்காளி- 1

வேர்க்கடலை- 1/4 கப் 

அரைத்த தேங்காய்- 2 தேக்கரண்டி

சமையல் சோடா- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 1 கப் கேழ்வரகு மாவை சேர்க்கவும்.

* ¼ கப் ரவை, ¼ கப் அரிசி மாவு மற்றும் ½ கப் தயிர் (தண்ணீரில் நீர்த்தது) சேர்த்து நன்கு கலக்கவும்.

* கலவை கெட்டியாகும் வரை அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

* கலவையை குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

* மாவின் நிலைத்தன்மை முன்பை விட தடிமனாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கிய கேரட், மிளகாய், வெங்காயம்,  கொத்தமல்லி, தக்காளி மற்றும் முந்திரி / வேர்க்கடலையை சேர்க்கவும்.

* அரைத்த தேங்காயைச் சேர்க்கவும் (விரும்பினால் – இது ஒரு நல்ல சுவை மற்றும் சிறிது இனிப்பைக் கொடுக்கும்).

* அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும்.  (மாவை 3-4 மணி நேரம்  இயற்கையாகவே புளிக்க வைத்து கொள்ளவும்)

* தொடர்ந்து கலக்கவும்.

* இப்போதுபனியார சட்டி  எடுத்து, அனைத்து குழிகளிலும் சிறிது எண்ணெய் வைத்து ஒவ்வொரு குழியிலும் மாவை  ஊற்றவும்.

* மூடியை மூடி, மெதுவாக நடுத்தர தீயில் 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.

* பின்னர் மூடியைத் திறந்து ஒவ்வொரு துண்டுக்கும் சிறிது எண்ணெய் சேர்த்து, மறுபுறம் புரட்டவும், மீண்டும் மூடியை மூடி சமைக்கவும்.

* உங்கள் சூப்பர் ஆரோக்கியமான கேழ்வரகு பனியாரம் தயாராக இருக்கும்.

Views: - 39

0

0