தெருவே கமகமக்கும் வகையில் ருசியான கொத்தமல்லி புலாவ்!!!

Author: Poorni
25 March 2021, 8:08 am
Quick Share

எல்லா உணவுகளுக்கும் கடைசி டச்சாக கொத்தமல்லி தழை தூவி இறக்குவது வழக்கம். இதன் மணமும், சுவையும் தனி தான். இத்தகைய கொத்தமல்லி தழை வைத்து என்றாவது புலாவ் செய்து பார்த்துள்ளீர்களா…? இந்த பதிவில் கொத்தமல்லி தழை புலாவ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு

பாஸ்மதி அரிசி – 2 கப் தேங்காய்ப்பால் – அரை கப் தயிர் – ஒரு மேஜைக்கரண்டி 

பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4

இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 4 பல்

எலுமிச்சைச் சாறு – ஒரு மேஜைக்கரண்டி

லவங்கம்- 1

ஏலக்காய் – 1 

பட்டை – சிறிய துண்டு எண்ணெய்- தேவைக்கேற்ப 

உப்பு- தேவையான அளவு 

நெய் – தேவையான அளவு

செய்முறை:

*கொத்தமல்லி புலாவ் செய்வதற்கு முதலில் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து நன்கு கழுவவும். 

*வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி வைக்கவும். 

*இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும்.

*நெய் உருகியதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் ஆகியவை சேர்த்து லேசாக வறுக்கவும்.

*பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*அடுத்ததாக நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது, தயிர், தேங்காய்ப்பால் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

*இப்போது 2 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும்.

*குக்கரில் இருந்து ஆவி வந்த பின் அதில் விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

*பத்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

*அவ்வளவு தான்… கமகமக்கும் கொத்தமல்லி புலாவ் தயாராக உள்ளது.

Views: - 235

12

3