வெயிலுக்கு இதமளிக்கும் சுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி!!!
29 March 2021, 11:28 amவாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நிச்சயமாக நாம் எதாவது செய்ய வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரண்டு முறை குளிப்பது, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது என நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களை நீரேற்றமாக வைக்க உதவும் இளநீரை கொண்டு ஆப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க… இது மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 200 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் உளுத்தம்பருப்பு – 50 கிராம்,
இளநீர் – 1
ஈஸ்ட் – ஒரு கரண்டி
பால் – சிறிதளவு எண்ணெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*பச்சரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள். அரிசி மற்றும் உளுந்தை தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது இளநீர் சேர்த்து அரைக்கவும்.
வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வையுங்கள். தோசை சுடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஆக்டிவேட் ஆன ஈஸ்டை தோசை மாவில் சேர்த்து கலக்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
ஆப்பச் சட்டி சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி பரப்பி, ஒரு கரண்டி மாவை ஊற்றி சுழற்றவும். ஒரு மூடி போட்டு மூடி ஆப்பத்தை வேக விடவும். அவ்வளவு தான்… சுவையான இளநீர் ஆப்பம் தயார்.
0
0