கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட சொல்லும் ருசியான வெண்டைக்காய் மசாலா…!!!

19 February 2021, 9:11 am
Quick Share

இன்று நாம் ஒரு சூப்பரான மற்றும் வித்தியாசமான வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது என பார்க்க போகிறோம். இதனை செய்து கொடுத்தால் வெண்டைக்காய் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். கண்டிப்பாக டிரை பண்ணி பாருங்க…

தேவையான பொருட்கள்:

250 கிராம் வெண்டைக்காய்

1 நறுக்கிய தக்காளி

1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்

1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்

1 தேக்கரண்டி தயிர்

1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள் 

1 தேக்கரண்டி மிளகாய் பொடி

தேவையான அளவு உப்பு

1 தேக்கரண்டி சீரக விதைகள்

1 சிட்டிகை மஞ்சள் தூள் 

தேவையான அளவு கொத்தமல்லி இலை

1 வெங்காயம்

தேவையான அளவு  எண்ணெய்

செய்முறை:

*வெண்டைக்காய் மசாலா செய்வதற்கு முதலில் வெண்டைக்காயை கழுவி காய வைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்து விடுங்கள். இதே எண்ணெயில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

*இப்போது வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் மல்லி விதைகளை சேர்த்து வறுக்கவும்.

*பிறகு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள்.

*அடுத்து தக்காளி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.

*ஒரு நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

*இவை ஓரளவு வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

*மசாலாக்கள் அனைத்தும் நன்றாக வதங்கிய பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

*தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காயை சேர்க்கவும்.

*வெண்டைக்காய் நன்றாக வெந்ததும், வறுத்த வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும்.

*அவ்வளவு தான்… சுவையான வெண்டைக்காய் மசாலா தயார்.

Views: - 562

0

0

Leave a Reply