சுவையான சத்தான முருங்கைக்கீரை கூட்டு ரெசிபி உங்களுக்காக..!!!

1 February 2021, 7:41 pm
Quick Share

கீரைகள் என்றாலே சத்தானது தான். அதிலும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்ப்பது பல நன்மைகளை தரக்கூடியது. இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை. இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர விரைவில் குணமாகும்.  முருங்கைக்கீரையை சூப், பொரியல், மசியல், குழம்பு, கூட்டு என வித விதமாக செய்து சாப்பிடலாம். இன்று நாம் முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:-

முருங்கைக்கீரை- 2 கப்

தக்காளி- 1 

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

சாம்பார் பொடி- 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு- 1/4 கப்

பாசிப்பருப்பு- 1/8 கப்

தண்ணீர்

தாளிப்பதற்கு:

கடுகு- ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்- 10

எண்ணெய்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 1

அரைக்க:

தேங்காய்- 2 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி 

தண்ணீர்

செய்முறை:

*முருங்கைக்கீரை கூட்டு செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வறுத்த பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை இருக்கட்டும். பிரஷர் அடங்கியதும் பருப்பை ஒரு கரண்டியால் மசித்து வையுங்கள்.

*அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும். 

*முருங்கைக்கீரையை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

*இதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கீரை வேகும் வரை இருக்கட்டும்.

*கூட்டு தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

*இந்த தாளிப்பை கீரைக் கூட்டில் சேர்த்து அடுப்பை அணைத்தால் ருசியான முருங்கைக்கீரை கூட்டு தயார்.

Views: - 24

0

0