ஞாபக சக்தியை மேம்படுத்த சுவையான வல்லாரை கீரை சட்னி!!!

30 March 2021, 7:42 pm
Quick Share

ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரை கீரை பெரும் பங்கு வகிக்கிறது. இது நரம்புகளை வலுவாக்குவதன் மூலமாக இதனை செய்கிறது. குழந்தைகளுக்கு உண்டாகும் கணைச்சூடு, மாந்தம் உள்ளிட்டவையை போக்க வல்லாரை பொடியை பாலில் கலந்து கொடுக்கலாம். மனதை சாந்தப்படுத்த உதவும் வேதிப்பொருள் வல்லாரை கீரையில் உள்ளது. இத்தகைய நன்மை வாய்ந்த வல்லாரை சட்னியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
வல்லாரைக்கீரை – அரை கட்டு
தக்காளி- 1
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 1/4 கப், பச்சை மிளகாய் – 5
கடுகு- 1/4 கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 கரண்டி உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*வல்லாரை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வல்லாரை கீரை சேர்த்து வதக்கவும்.

*பிறகு வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

*பொருட்கள் அனைத்தும் வதங்கியதும் அதனை ஆற வைத்து சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

*ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்‌.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.

*அவ்வளவு தான்… சுவையான வல்லாரை கீரை சட்னி தயார்.

Views: - 2

0

0