இனிப்பு சாப்பிட வேண்டும் போல உள்ளதா… இந்த வித்தியாசமான ரெசிபியை செய்து பாருங்கள்!!!
13 August 2020, 10:58 amஉங்களுக்கு இனிப்பு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. வழக்கமான சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை மறந்து, இன்றிரவு விரும்பத்தக்க பழங்கள் மற்றும் தயிர் கொண்டு ஒரு புதிய இனிப்பு வகையை உருவாக்குவோம்.
பழங்கள் மற்றும் தயிர் ஒரு உன்னதமான கலவையாகும். இந்த எளிய மற்றும் ஆரோக்கியமான இனிப்பு செய்முறையை நிச்சயமாக உங்கள் வீட்டில் முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
தயிர்- 500 கிராம்
தேன்- 3 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ்- 2 தேக்கரண்டி
உலர்ந்த பெர்ரி- 3 தேக்கரண்டி
ஆரஞ்சு- 1
மாம்பழம்- 1
கார்ன்ஃப்ளேக்ஸ்- ¼ கப்
பாதாம் பருப்பு- 8
செய்முறை:
* ஒரு பேக்கிங் தட்டில் விளிம்புகள் உட்பட ஃபாயில் அல்லது பார்ச்மெண்ட் பேப்பரை வையுங்கள். (வெண்ணெய் காகிதம் இல்லை)
* ஒரு பாத்திரத்தில் தயிர், தேன் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். கட்டிகள் இல்லாத வரை கலக்கவும்.
* தயிரை பேக்கிங் தட்டில் ஊற்றவும்.
* பழங்கள், கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் பாதாம் ஆகியவற்றைக் கொண்டு மேலே அலங்கரித்து, ஒரு கரண்டியால் சிறிது அழுத்துங்கள்.
* இதனை குளிர்சாதன பெட்டியின் ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வரை வைக்கவும்.
* பின்னர் அதிலிருந்து நீக்கி, உங்கள் கைகளால் உடைத்து பரிமாறவும்.