நீங்கள் விரும்பி உண்ணும் பீட்சாவின் வரலாறு பற்றி தெரியுமா???

Author: Udayaraman
12 October 2020, 9:56 pm
Quick Share

இன்றைய நவீன உலகில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பீட்சா. உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஆசையோடு வாங்கி உண்ணும் உணவு என்றும் கூட கூறலாம். இப்படிப்பட்ட பீட்சா உறுவான வரலாறு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா???

பீட்சா என்னும் சொல்லானது இத்தாலியில் இருந்து உருவானது ஆகும். 1883 ஆம் ஆண்டு மேற்கு இத்தாலியில் வாழ்ந்த நோபிள் இன மக்கள் கடும் உழைப்பாளர்களாக இருந்துள்ளனர். அதிகப்படியான வேலை பார்த்த அவர்களுக்கு அதிகமாக பசி எடுப்பது வழக்கம் தானே. இந்த காரணத்தினால் அவர்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்க கூடாது என்பதால் தட்டையான ரொட்டி தயாரிக்கப்பட்டது. 

கடினமாக இருக்கும் அந்த ரொட்டி அவர்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பியது போல் இருக்க உதவி செய்துள்ளது. ஆகையால் ஏழை மக்களின் பசியை போக்கும் ஒரு உணவாக பீட்சா இருந்து வந்துள்ளது. ஒரு சமயத்தில் இத்தாலி நாட்டின் இளவரசரான மெரிகரெக்டா நகர்வலம் வந்து கொண்டிருந்தார். 

நகர்வலம் வந்துகொண்டிருந்த அவர், ரொட்டி சாப்பிட்டு இருந்த மக்களை பார்த்துள்ளார். அந்த ரொட்டியை பார்த்த அவருக்கு சாப்பிட வேண்டும் போல இருந்துள்ளது. எப்படியாவது அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது அரண்மனைக்கு திரும்பி உள்ளார். அங்கு சென்ற அவர்  தனது சமையல்காரரிடம் இதே போன்ற ஒரு ரொட்டியை தனக்கு செய்து தருமாறு கூறியுள்ளார். 

உடனடியாக அந்த சமையல்காரர் தனது அரசர் கேட்ட ரொட்டியை செய்துள்ளார். அந்த ரொட்டியை அப்படியே தருவதற்கு பதிலாக அதன் மீது தக்காளி, பாலாடைக்கட்டி, குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ருசி மிகுந்ததாக மாற்றியுள்ளார். இந்த ரொட்டியே பிற்காலத்தில் ‘மெர்கரெக்டா பீட்சா’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

Views: - 40

0

0