சூடான சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோன்னு கவலைப்பட வேண்டாம்… உங்களுக்காகவே இந்த ரெசிபி!!!

23 April 2021, 6:34 pm
Quick Share

சூடான சாக்லேட் யாருக்கு தான் பிடிக்காது. பொதுவாக பண்டிகை காலங்களில் சூடான சாக்லேட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அதிக கலோரிகள் இருப்பதால் அடிக்கடி சாப்பிட முடியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கலோரி குறைவாக உள்ள பொருட்களை நாம் பயன்படுத்தினால் இந்த  சூடான சாக்லேட் ஆரோக்கியமாக  இருக்கும். எனவே, உங்களுக்காக குறைந்த கலோரி சூடான சாக்லேட் ரெசிபி! 

தேவையான பொருட்கள்:

1 கப் பாதாம் பால்

1 தேக்கரண்டி இனிப்பு இல்லாத கோகோ தூள்

1 தேக்கரண்டி சர்க்கரை

1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்

சிறிதளவு இலவங்கப்பட்டை தூள் 

முறை:

ஒரு பாத்திரத்தில் இனிப்பு இல்லாத கோகோ பவுடர், ஸ்டீவியா மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் பால் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தி கலவை கிரீமியாக மாறும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது ​​மீதமுள்ள பாதாம் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ்  சேர்க்கவும். இந்த  கலவையில் கோகோ பவுடரில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இந்த கட்டத்தில், நறுமணத்தையும் சுவையையும் அதிகரிக்க நீங்கள் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்.

அடுத்து, அடுப்பை சிம்மில் வைத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து கலவையை சேர்க்கவும். இதனை 5-7 நிமிடங்கள் சூடாக்கவும். 

அவ்வளவு தான்… இப்போது உங்களுக்கு பிடித்த பாத்திரத்தில் இந்த  சூடான சாக்லேட்டை ஊற்றி, அனுபவியுங்கள்!

Views: - 16

0

0