இரண்டே பொருட்களை கொண்டு தயாராகும் ஈசியான இனிப்பு ரெசிபிகள்!!!

25 February 2021, 8:33 pm
Quick Share

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு  இனிப்புகள் என்றால் பிடிக்கும். ஆனால் வேலை முடித்துவிட்டு சோர்வாக வீட்டிற்கு வரும்போது நமக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை செய்து சாப்பிட சோம்பேறித்தனமாக இருக்கும். எனவே உங்களுக்காக இன்று குறைவான நேரத்தில் இரண்டே பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இரண்டு இனிப்பு ரெசிபிகளைப் பற்றி பார்க்கலாம். இது டார்க் சாக்லேட் ஃபட்ஜ் (Dark chocolate fudge) மற்றும் நோ பேக் பிரவுனி (no bake brownie) என்று அழைக்கப்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

200 கிராம் – டார்க் சாக்லேட்

100 கிராம்- டோஃபி நட் வெண்ணெய் (toffee nut butter)

செய்முறை:

* டார்க் சாக்லேட் ஃபட்ஜ் செய்வதற்கு முதலில் சாக்லேட்டை டபுள் பாய்லர் முறைப்படி உருக்கி கொள்ளுங்கள். 

*உருக்கிய சாக்லேட்டுடன் டோஃபி நட் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். 

*இந்த கலவையை ஒரு டிரேயில் ஊற்றி அதனை ஃப்ரீசரில் வைக்கவும். 

*இது உறுதியாக மாறும்  வரை உறைய வையுங்கள். 

* உங்களுக்கு பிடித்தமான வடிவங்களில்  துண்டுகளாக வெட்டி சாப்பிடுங்கள்.

ஒரு துண்டுக்கு: 35 கிராம்

கார்போஹைட்ரேட்: 14

புரதங்கள்: 4

கொழுப்புகள்: 17

தேவையான பொருட்கள்:

2 கப் – அக்ரூட் பருப்புகள்

1.5 கப் – பேரிச்சம் பழம்

1 கப் – கோகோ தூள்

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். 

* இதனை 8*8 டிரேயில் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும்.

ஒரு துண்டுக்கு: 45 கிராம்

கார்போஹைட்ரேட்: 21

புரதங்கள்: 4.5

கொழுப்புகள்: 11.5

Views: - 27

0

0