குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறு மொறு முட்டை, உருளைக்கிழங்கு கட்லெட்!!!

8 March 2021, 1:00 pm
Quick Share

வீட்டில் உள்ள குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏதேனும் தின்பண்டம் கேட்டால் கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலே ஆரோக்கியமான பண்டங்களை செய்து கொடுங்கள். உங்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என யோசனையாக இருந்தால் இன்று நாம் பார்க்க இருக்கும் முட்டை, உருளைக்கிழங்கு கட்லெட் ரெசியை முயற்சி செய்து பாருங்கள். திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்துவிட்டால் கூட இதனை செய்து கொடுத்து நீங்கள் அசத்தலாம். இப்போது முட்டை, உருளைக்கிழங்கு கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பச்சை முட்டை – 1

வேகவைத்த முட்டை – 4

உருளைக்கிழங்கு – அரை கிலோ

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 

மல்லி தூள் – 2 தேக்கரண்டி 

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி 

நறுக்கிய வெங்காயம் – 1

தேங்காய் பால் – அரை கப்

மைதா மாவு – 2 தேக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

பிரெட் தூள் – தேவையான அளவு

பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

*கட்லெட் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். 

*வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*அடுத்து வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

*ஒரு சிறிய பவுலில் பச்சை முட்டை உடைத்து ஊற்றவும்.

*இதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

*பிறகு மற்றொரு கிண்ணத்தில் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

*இந்த கலவையில் இருந்து சிறிய பகுதிகளை எடுத்து உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள். 

*ஒவ்வொரு உருண்டையையும் உங்கள் உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

*தட்டிய பிறகு இதனை வேக வைத்த முட்டைக்கு நடுவில் வைத்து இதனை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கவும்.

*பிறகு பிரெட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

*இதனை எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம் அல்லது தோசைக்கல்லில் போட்டும் வறுக்கலாம்.

*அவ்வளவு தான்… ஆரோக்கியமான, சுவையான மொறு மொறு கட்லெட் தயார்.

Views: - 11

0

0