கொட்டும் மழையை ரசித்தவாறு ஜாலியாக சாப்பிட மொறு மொறு ஆனியன் ரிங்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
18 November 2021, 1:57 pm
Quick Share

ஜோராக பெய்யும் மழையை உட்கார்ந்தபடி இரசிக்க சூடான டீ மற்றும் சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் இருந்தா எப்படி இருக்கும்…??? நல்லா இருக்கும்ல. உங்களுக்காகவே இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது டேஸ்டான மொறு மொறு ஆனியன் ரிங்ஸ் ரெசிபி. இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 11/2 கப்
சோள மாவு-1/2 கப்
வெங்காயம்- 5
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
பிரட் தூள்
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

மயோ டிப் செய்ய:-
மயோனைஸ்- 4 தேக்கரண்டி
சிவப்பு சில்லி சாஸ்- 3 தேக்கரண்டி

செய்முறை:
*ஆனியன் ரிங்ஸ் செய்வதற்கு முதலில் வெங்காயத்தை முதலில் தோலுரித்து குறுக்கு வாக்கில் மூன்றாக நறுக்கவும்.

*நறுக்கிய வெங்காயத்தை தனித்தனியாக பிரித்து வையுங்கள்.

*ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவை சேர்த்து கலக்கவும்.

*இந்த மாவு கலவையில் நறுக்கி வைத்த வெங்காய துண்டுகளை பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

*இப்போது வேறொரு கிண்ணத்தில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸ் ஆகிய இரண்டையும் கலந்து மயோ டிப் தயார் செய்யவும்.

*அதே மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து மீண்டும் வெங்காய துண்டுகளை இதில் பிரட்டி எடுக்கவும்.

*இப்போது பிரட் தூளில் பிரட்டி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

*இதனை மயோ டிப்புடன் சூடாக பரிமாறவும்.

Views: - 156

0

0

Leave a Reply