ரவை இருந்தால் போதும்… பத்தே நிமிடத்தில் ருசியான ஸ்னாக்ஸ் தயார்!!!

1 September 2020, 11:20 pm
Quick Share

உங்கள் குடும்பத்தினருடன் மாலை நேரத்தில் உட்கார்ந்து டீயோடு சேர்த்து சாப்பிட இன்று நாம் ஒரு அருமையான ஸ்னாக்ஸ் பார்க்க போகிறோம். இதனை பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். ருசியும் அசத்தலாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

ரவை- 100 கிராம்

உருளைக்கிழங்கு- 2

மிளகாய் தூள்- 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

மாங்காய் பொடி- 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

மைதா மாவு- 1/4 கப்

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 100 கிராம் ரவை எடுத்து கொள்ளுங்கள். இதனோடு 1/2 தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை பிசைய கிட்டத்தட்ட ஐந்து தேக்கரண்டி தண்ணீர் தேவைப்படும்.

இப்போது இந்த ரவையை பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம். மற்றொரு கிண்ணத்தில் இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும். இதனோடு 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள், நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி மாங்காய் பொடி, நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் ஊற வைத்த ரவையை சேர்த்து பிசையவும்.

தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது. இப்போது கையில் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு எடுத்து உருட்டி உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்த ரவை கலவையை மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போடவும். 

இரண்டு பக்கத்திலும் பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவு தான் ருசியான மாலை நேர ஸ்னாக்ஸ் தயார்…

Views: - 0

0

0