குழந்தைகள் கூட ஆசையாக சாப்பிடும்… மொறு மொறு பாலக் கீரை சிப்ஸ்…!!!

4 May 2021, 12:00 pm
Quick Share

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பும் பலர் உள்ளனர். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது என்பதற்காக சுவையான உணவை கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. கீரை நம் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நமக்கு தெரியும். ஆனால் அதன் சுவை காரணமாக பலர் அதனை தவிர்த்து விடுவார்கள். கீரையை வைத்து ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா…? ஆம், உண்மை தான். இன்று கீரையை வைத்து ஒரு சுவையான தின்பண்டம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

இந்த ரெசிபிக்கு நாம் பயன்படுத்தப் போகும் கீரை பாலாக் கீரை. இது  உங்களுக்கு நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிமையை வளர்க்கவும் உதவும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

இந்த கீரையில் வைட்டமின்கள் A, C மற்றும் K, மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு ஆகியவற்றில் உள்ளது. இதனை சாப்பிடுவது உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இரத்த அழுத்த அளவை மேம்படுத்துகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.  

தேவையான பொருட்கள்:

30 கிராம் பாலக் கீரை 

1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் 

ருசிக்க உப்பு மற்றும் மிளகு

செய்முறை:

1. ஓவனை 150 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கவும்.

2. அலுமினியத் தகடுடன் இரண்டு பேக்கிங் தாள்களை அதில் வையுங்கள்.

3. ஒரு பாத்திரத்தில் பாலாக் இலைகளை (கழுவி காய வைத்தது)  வைத்து, ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.  பாலாக் கீரை ஆலிவ் எண்ணெயுடன் சேரும் வரை நன்கு கலக்கவும்.

4. பேக்கிங் தாள்களில் பாலாக் இலைகளை வைக்கவும்.

5. பேக்கிங் தாள்களை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் சுட்டுக்கொள்ளுங்கள். 

6. சிப்ஸ் பேக்கிங் தாளில் சுமார் 2-3 நிமிடங்கள் இருக்கட்டும்.

7. உப்பு மற்றும் மிளகுத்தூள் தெளிக்கவும். அவ்வளவு தான்… சிப்ஸ் தயாராக உள்ளது.

Views: - 120

0

0

Leave a Reply