அனைவருக்கும் பிடித்த தேங்காய் பர்பி… இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்!!!

14 November 2020, 3:19 pm
Quick Share

தேங்காய் பர்பி ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும். இது தேங்காய் மற்றும் சர்க்கரை ஆகிய 2 முக்கிய பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு எளிய மற்றும் எளிதான இனிப்பு செய்முறையாகும். இதனை 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்து விடலாம்.   

தேவையான பொருட்கள்:

2 கப் துருவிய தேங்காய் 

1.5 கப் சர்க்கரை 

3 தேக்கரண்டி பால் 

1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் 

2 தேக்கரண்டி நெய் 

10 முந்திரி பருப்பு

செய்முறை:

துருவிய தேங்காயை ஒரு நடுத்தர வெப்பத்தில் சுமார் 2 நிமிடங்கள் வறுக்கவும்.  தேங்காயை பழுப்பு நிறமாக்க வேண்டாம். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து மிதமான வெப்பத்தில் சமைக்கவும். சர்க்கரை கரைந்து வரும்வரை  கிளறவும். 

இதற்கிடையில் சில முந்திரிகளை வறுக்க  நெய்யை உருக்கி முந்திரி பருப்பை போடவும்.  அதனை  பொன்னிறமாக வறுக்கவும்.  தேங்காய் சர்க்கரை கலவை கெட்டியாகியவுடன் சிறிது ஏலக்காய் தூள், ஒரு தேக்கரண்டி நெய் மற்றும்  வறுத்த முந்திரி சேர்த்து மீண்டும் கலக்கவும். 

சிறிது நெய்யுடன் ஒரு தட்டை கிரீஸ் செய்து தேங்காய் கலவையை மாற்றி ஒரு கரண்டியால் வடிவமைக்கவும் (ஒட்டாமல் தடுக்க கரண்டியில் நெய்யை  கிரீஸ் செய்யவும்). அவை சிறிது குளிர்ந்தவுடன் அவற்றை நீங்கள் விரும்பிய வடிவங்களில் வெட்டுங்கள். நம் சுவையான தேங்காய் பர்பி தயார்.

Views: - 22

0

0