இனிப்பு சாப்பிடனும் போல இருக்கா…. இந்த வித்தியாசமான ருசி மிகுந்த பாயாசத்தை நீங்கள் ஏன் முயற்சிக்க கூடாது???

7 September 2020, 2:00 pm
Quick Share

எண்ணற்ற பாரம்பரிய இனிப்பு வகைகள் உண்டு.  அவற்றில் மிகவும் ஆச்சரியமான ஒன்று பாயாசம் ஆகும். இது ஆங்கிலத்தில் கீர் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ரவை, சேமியா, பருப்பு மற்றும் அரிசி ஆகிய பிரபலமான பொருட்கள் கொண்டு பாயாசம் செய்யப்படுகிறது. நீங்கள் எப்போதாவது ஒரு பழ பயாசம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எப்போதாவது அவுரிநெல்லி அதாவது புளுபெர்ரியால் செய்யப்பட்ட ஒரு பயாசத்தை ருசித்திருக்கிறீர்களா? ஆம், அப்படி ஒரு எளிய மற்றும் வித்தியாசமான செய்முறையை தான் இங்கே நாம் பார்க்க உள்ளோம். 

தேவையான பொருட்கள்:

400 கிராம் – புளுபெர்ரி 

30 மிலி – நெய்

30 கிராம் – சர்க்கரை

1 லிட்டர்- பால்

30 கிராம் – பழுப்பு சர்க்கரை

50 கிராம் – வெல்லம்

செய்முறை:

* ஒரு கடாயில், நெய் மற்றும் சர்க்கரையுடன் புளூபெர்ரி பழங்களை வதக்கி, நன்றாக பேஸ்ட் செய்து குளிர செய்து  அதை தனியாக வைக்கவும்.

* ஒரு பெரிய கடாயில், ஒரு லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சுங்கள். மேலிருந்து கிரீம் ஒரு அடுக்கை உருவாக்கத் தொடங்கும் வரை, குறைந்த முதல் நடுத்தர தீயில் பாலை கொதிக்க வையுங்கள். பால்  பாதியாகக் குறையட்டும்.   

* பிறகு பாலை நன்றாக கலந்து குளிர செய்யுங்கள். 

* ஒரு கடாயில், சர்க்கரையை கேரமல் செய்து, வெல்லப் பாகினை பாலில் சேர்க்கவும். இதனை நன்றாக கலக்குங்கள். 

* ஒரு பாத்திரத்தில் புளூபெர்ரி கூழ் மற்றும் பாலை சேர்க்கவும். நன்கு கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

Views: - 10

0

0