பக்கத்து வீட்டாரை சுண்டி இழுக்கும் அளவிற்கு மொறு மொறு மீன் மசாலா ஃப்ரை!!!

2 November 2020, 9:30 am
Quick Share

மீன் பிரியர்களுக்கு ஒரு அசத்தலான விருந்து இன்றைய ரெசிபியில் காத்திருக்கிறது. அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா…??? மீன் மசாலா ஃப்ரை ரெசிபி தான்ங்க இன்று நாம் பார்க்க இருப்பது. இது ஒரு வித்தியாசமான மீன் ரெசிபியாக இருக்கும். இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பொரிக்க:-

மீன்- 400 கிராம்

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி 

உப்பு மற்றும் மிளகு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

மசாலாவுக்கு:-

எண்ணெய்- 2 தேக்கரண்டி 

கடுகு- 1/4 தேக்கரண்டி 

சீரகம்- 1/2 தேக்கரண்டி 

பெருஞ்சீரகம்- 1/2 தேக்கரண்டி  

இஞ்சி- 1 தேக்கரண்டி

பூண்டு- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 1 

சிவப்பு மிளகாய்- 1 

பிரியாணி இலை- 1 

வெங்காயம்- 3

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி 

கரம் மசாலா- 1 தேக்கரண்டி 

உப்பு- தேவையான அளவு 

கொத்துமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

*உங்களுக்கு விருப்பமான மீனை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து மீனை ஊற வைக்கவும். இதனை 15 -20 நிமிடம் தனியாக வைக்கவும்.

*தோசைக்கல்லில்  எண்ணெயை சூடாக்கி, இருபுறமும் மிருதுவாக இருக்கும் வரை மீனை வறுக்கவும். பிறகு அதை எண்ணெயிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

*இப்போது அதே வாணலியில் கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, உலர்ந்த சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

*பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அவை பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். இது பேஸ்டாக மாறும் வரை சமைக்கவும்.

*இப்போது சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் நாம் வறுத்து வைத்த மீனைச் சேர்த்து ஒரு மூடியால் மூடி வைக்கவும். சில நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் அதை புரட்டி போடவும். மேலும் சில நிமிடங்கள் சமைக்கவும். 

*இறுதியாக கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இப்போது நம் சுவையான மீன் மசாலா வறுவல் சாதத்துடன் பரிமாற தயாராக உள்ளது. 

Views: - 23

0

0

1 thought on “பக்கத்து வீட்டாரை சுண்டி இழுக்கும் அளவிற்கு மொறு மொறு மீன் மசாலா ஃப்ரை!!!

Comments are closed.