மீன் வறுவல் செய்ய ஒவ்வொரு முறையும் இனி மசாலா செய்ய வேண்டாம்… ஒரு முறை இதை செய்து வைத்தாலே போதும்!!!

10 November 2020, 9:28 am
Quick Share

மீன் என்றாலே தனி சுவை தான். அதன் சுவை மட்டும் அல்ல ஆரோக்கியமும் தூள் தான். அதிலும் மீன் பிரியர்களின் ஃபேவரெட்  வறுத்த மீன். மசாலாவை தடவி ஊற வைத்து பொரித்து எடுக்கும் மீனை சாப்பிடும் போது சும்மா டக்கரா இருக்கும். ஆனால் இனி இதற்கென ஒவ்வொரு முறையும் மசாலா செய்ய தேவையில்லை. இன்று நாம் பார்க்க இருக்கும் மீன் மசாலா பொடியை நீங்கள் தயார் செய்து வைத்தாலே எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது மீன் வறுவல் மசாலா பொடி எவ்வாறு செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மிளகு- 1/2 கப்

காய்ந்த மிளகாய்- 2 கப்

வர மல்லி- ஒரு கப்

சீரகம்- 10 கிராம்

சோம்பு- 10 கிராம்

கிராம்பு- 10 கிராம்

வெந்தயம்- 5 கிராம்

கடுகு- 5 கிராம்

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

செய்முறை:

மீன் வறுவல் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். ஒரு கப் வர மல்லி சேர்த்து எண்ணெய் எதுவும் ஊற்றாமல் வாசனை வரும் வரை வறுக்கவும். அடுத்து மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுத்த பொருட்களை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆற விடவும். 

இவ்வாறு அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும். பொருட்களின் நிறம் கொஞ்சமாக மாறி வாசனை வரும் வரை வறுத்தால் போதும். கருக விட கூடாது. அனைத்தையும் வறுத்து நன்றாக ஆற விடுங்கள். பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். 

அரைத்த பொடியை காற்று உள்ளே செல்ல முடியாத ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைக்கவும். மீன் வறுக்கும் போதெல்லாம் எலுமிச்சை சாற்றோடு இந்த பொடியை மீன் மீது தடவி ஊற வைத்து பொரித்து எடுக்க வேண்டியது தான். ருசியான மீன் வறுவல் தயார்.

Views: - 55

0

0

1 thought on “மீன் வறுவல் செய்ய ஒவ்வொரு முறையும் இனி மசாலா செய்ய வேண்டாம்… ஒரு முறை இதை செய்து வைத்தாலே போதும்!!!

Comments are closed.