கோவா ஸ்பெஷல் அட்டகாசமான இறால் கிரேவி!!!

4 April 2021, 1:08 pm
Quick Share

கோவா ஒரு கடலோர நகரம் என்பதால், இது சுவையான கடல் உணவுகளுக்கு பெயர் பெற்றது மற்றும் இறால் குழம்பு மிகவும் பிரபலமான கடல் உணவு வகைகளில் ஒன்றாகும். இன்று நாம் பார்க்க இருப்பது கோவா ஸ்பெஷல் இறால் குழம்பு. இது தேங்காய் பால், மஞ்சள், கருப்பு மிளகு, மற்றும் இறால்களால் தயாரிக்கப்படும் ஒரு ரிச்சான மற்றும் கிரீமி குழம்பு ஆகும். இது இனிப்பு மற்றும் காரமான  சுவையைக் கொண்டது.

இந்த குழம்பின் மிக முக்கியமான மூலப்பொருள் தேங்காய் பால் ஆகும். இப்போது இது சூப்பரான இறால் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

செய்முறை: 

குழம்பு செய்வதற்கு முன் முதலில் இறால்களை ஊற வைக்க வேண்டும். அதற்கு நன்கு சுத்தம் செய்த 1/2 கிலோ இறால்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். இதனோடு  உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் 1 கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து  15-30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி சீரகம், ½ தேக்கரண்டி கொத்தமல்லி, ½ தேக்கரண்டி கருப்பு மிளகு  ஆகியவற்றை டிரை ரோஸ்ட் செய்யவும். இந்த பொருட்களை ஆற வைத்து கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே 6 பல் பூண்டு, 4 உலர்ந்த சிவப்பு மிளகாய், ½ தேக்கரண்டி புளி விழுது, 1 கப் புதிதாக அரைத்த தேங்காய், மற்றும் 1 கப் தண்ணீர்  சேர்த்து அரைக்கவும்.  மென்மையான பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்கி, ஒரு  நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். 1 கரண்டி  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். இப்போது 1  நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது சாஃப்ட்க  மாறும் வரை சமைக்கவும்.

பிறகு 1 கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். 

இப்போது நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் 1 கப் தேங்காய் பால் சேர்க்கவும். கிரேவியில் ஒரு கொதி வந்ததும், 2 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது நாம் ஊற வைத்த இறால்களைச் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி  அலங்கரித்து சாதத்துடன்  பரிமாறவும்.

Views: - 0

0

0