கிராமத்து ரெசிபி- சுவையான சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

26 March 2020, 6:47 pm
kuzhambu updatenews360
Quick Share

தேவையான   பொருட்கள்:

சுண்டைக்காய் – 300 கிராம் 

வெந்தயம்  – 30 கிராம் 

சின்ன  வெங்காயம் – 15

பூண்டு – 15 பல் 

புளி – எலுமிச்சை  அளவு 

சீரகம் – 50 கிராம் 

கொத்துமல்லி – 80 கிராம் 

தக்காளி  -3

தேங்காய் –  அரை முடி – துருவியது 

மிளகு  – 5

வர மிளகாய் – 10

உப்பு  – சிறிதளவு ( கல்   உப்பு சேர்த்தால்   இன்னும் சுவையாக இருக்கும்)

தண்ணீர் – தேவையான  அளவு 

மஞ்சள்  தூள் – தேவைக்கு  ஏற்ப 

எண்ணெய் – தேவையான  அளவு 

கறிவேப்பிலை –  தேவையான அளவு 

kuzhambu updatenews360

செய்முறை:

  • சுண்டைக்காயை   தட்டி , மூன்று   முறை தண்ணியில் சேர்த்து  விதைகள் விழுமாறு அலசி எடுத்து   வைத்துக் கொள்ளுங்கள் 
  • அடுப்பில்  வாணலியை வைத்து   சிறிதளவு எண்ணெய் ஊற்றி  அது மிதமாக சூடாக்கவும்.
  • அதில் எடுத்து   வைத்துள்ள வெந்தயத்தில்  பாதி அளவை சேர்க்கவும்.  10 பூண்டை உரித்து முழுதாக   சேர்க்க வேண்டும். இதை வணக்கியபடி   வரமிளகாயை சேர்க்கவும். பின்பு கொத்துமல்லியை   சேர்த்து வணக்க வேண்டும். இதை பொன்னிறமாக வறுக்க  வேண்டும்.
  • அதனுடன் நறுக்கிய  தக்காளி மற்றும் தேங்காய்   துருவலை சேர்த்து தாளித்து   விடுங்கள். நன்கு வணக்கிய பின்பு    இதை ஆற விடுங்கள். பின்பு மிக்சியில்   போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.  
  • அடுப்பில்  வாணலியை வைத்து   சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.  பின்பு மிதமான சூட்டில் வெந்தயத்தை   சேர்த்துக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயம்   மற்றும் 5 பல் பூண்டை சேர்த்து வணக்கவும். பின்பு  கறிவேப்பிலையை சேர்க்கவும்.
  • நசுக்கி  வைத்துள்ள   சுண்டைக்காயை  வாணலியில் சேர்த்து  வணக்க வேண்டும். இப்போது   இதில் சிறிதளவு உப்பு, மஞ்சள்  தூள் மற்றும் மிளகாய் பொடியை சேர்த்துக்   கொள்ளுங்கள். 5 நிமிடம் வரை இதை வணக்க விடுங்கள்.
  • பின்பு   இதில் அரைத்த  விழுதை சேர்க்கவும்.  பின்பு சிறிதளவு தண்ணீர்   சேர்த்து கலக்கி விடுங்கள்.  தேவையான அளவு சேர்த்து, உரைப்பை   சரி பார்த்துக் கொள்ளுங்கள். 
  • 1 கொதி   வந்தவுடன், புளி  கரைசலை இதில் சேர்த்து  கலக்கிக் கொள்ளவும். பின்பு   இதை கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள்.
  • சுவையான  சுண்டைக்காய்   புளிக் குழம்பு தயார்.  இதை நீங்களும் வீட்டில்   ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே,  அதீத சுவையுடன் இருக்கும்.

Leave a Reply