பாட்டி கைப்பக்குவப்படி தினைஅரிசி கீரை சாதம் செய்யலாம் வாங்க!

23 March 2020, 9:55 am
thinai rice updatenews360
Quick Share

கிராமத்து ரெசிபியான தினை அரிசி சாதம் உங்களுக்கு நல்லவிதமான ஒரு சுவையை தரும். இதை காலை நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும் செய்து தாருங்கள்.

இந்த தினை அரிசி வெயில் காலம் மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ற ஒரு உணவாகும். அதுமட்டுமில்லாமல் இதை செய்வதையும் மிக எளிமையான முறையாகும். தினை அரிசி மற்றும் கீரையை வைத்து உணவு சமைப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

தினை அரிசி – அரை கிலோ
முருங்கை கீரை – 6 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு -சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் -தேவையான அளவு
வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 50 கிராம்
கறிவேப்பிலை – 1 கொத்து
கடுகு -சிறிதளவு
வர மிளகாய் -2

செய்முறை:

  • முருங்கை கீரையை ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நறுக்கி வைக்கவும்.
  • முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கடுகு மற்றும் வர மிளகாயை சேர்க்கவும். வர மிளகாய் நல்ல மணம் அடிக்கும்.
  • பின்பு அதனுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தழைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டை சுத்தம் செய்து அம்மியில் நசுக்கி இந்த கலவையில் சேர்க்கவும்.இதை நன்கு வணக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • தினை அரிசியை கழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு குக்கரில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் தினை அரிசியை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் நறுக்கி வைக்கப்பட்டுள்ள முருங்கை கீரையை சேர்க்கவும்.
  • அடுத்து இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி விடுங்கள்.
  • இறுதியில் தாளித்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்க்கவும். அனைத்தையும் கலக்கி விட்டு உரைப்பு மற்றும் காரத்தை சரி பார்க்கவும்.பின்பு குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை காத்திருங்கள்.
  • விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, விசில் அடங்கியதும் தினை சாதத்தை கிளறி விடவும். சுவையான தினை அரிசி கீரை சாதம் தயார். நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே, அதீத சுவையுடன் இருக்கும்.

Leave a Reply