தீபாவளி வருவதற்கு இன்னும் ஒரே வாரம் தான் இருக்கிறது. அனைவரது வீட்டிலும் தீபாவளி பலகாரங்கள் செய்ய ஆரம்பித்திருப்போம். ஒரு சிலர் வேலை பளு காரணமாக கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் பட்டன் பாதுஷா ரெசிபி ரொம்ப சிம்பிளானது. இதனை சிறிது நேரத்திலேயே யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம். இப்போது ருசியான பட்டன் பாதுஷா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு
பேக்கிங் சோடா
பேக்கிங் பவுடர்
நெய்
சர்க்கரை
ஏலக்காய்
எலுமிச்சை சாறு
ஃபுட் கலர்
பொரித்து எடுக்க தேவையான கடலை எண்ணெய்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலக்கும்போதே கலவை பொங்கி வருவதை உங்களால் பார்க்க முடியும். அதே பவுலில் ஒரு கப் மைதா மாவு மற்றும் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை இறுக்கமாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைந்த பிறகு 1/2 மணி நேரம் அதனை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதுவே கடைகளில் நாம் வாங்கும் பாதுஷாக்களை டால்டா சேர்த்து செய்வார்கள். நாம் வீட்டில் செய்வதால் இதனை இன்னும் ஆரோக்கியமாக நெய்யில் செய்கிறோம்.
இப்போது மாவு 1/2 மணி நேரம் ஊறிய பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளலாம். உருட்டிய மாவின் நடுவில் லேசாக ஒரு அழுத்தம் கொடுத்து அனைத்தையும் இதே போல பட்டன் அளவில் தயார் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: இந்த பிரச்சனை இருக்கவங்க பாதாம் பருப்ப கண்டிப்பா அவாய்டு பண்ணீடுங்க!!!
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விடவும். இதில் இரண்டு பொடித்த ஏலக்காய், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு தயாரானதும் வேறொரு கடாயை அடுப்பில் வைத்து பாதுஷாவை பொரித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் லேசாக சூடானவுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை போட்டு இரு பக்கமும் சிவந்து வந்தவுடன் பொரித்து எடுக்கவும். நிறம் மாறியதும் சர்க்கரைப்பாகில் சேர்த்து இரு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அலாதியாக இருக்கும்.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.