சிக்கன் வைத்து ஆம்லெட்டா… கேட்கும்போதே நாவில் எச்சில் ஊறுது…!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2021, 10:00 am
Quick Share

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு நான்வெஜ் வெரைட்டிகளுள் ஒன்று ஆம்லெட் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஃபேவரெட்டான ஆம்லெட்டை சிக்கன் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும். அட்டகாசமா இருக்கும்ல… ஒரு வேலை வீட்டில் சமைத்த சிக்கன் மீதமாகி விட்டால் அதனை வைத்து ஒரு டேஸ்டான சிக்கன் ஆம்லெட் எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
முட்டை- 4
மீதமான சிக்கன் துண்டுகள்
நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய்- 1
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்கு அடித்து கிளறிக் கொள்ளவும்.

* கிளறிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

* இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

* இதன் மீது முட்டை கலவையை சேர்த்து மீதமான சிக்கன் துண்டுகளை மழைச்சாரல் போல தூவவும்.

* இதனை ஒரு மூடி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து பின்னர் திருப்பி போடவும்.

* அவ்வளவு தான்… சிக்கன் ஆம்லெட் தயார். சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க.

Views: - 199

0

0