சுத்தமான மண மணக்கும் பசு நெய் வீட்டில் செய்வது எப்படி???

17 September 2020, 1:00 pm
Quick Share

பாலில் இருந்து எடுக்கப்படும் அனைத்து பொருட்களும் சுவையானது மற்றும் அதோடு ஆரோக்கியமானதும் கூட. அதில் குறிப்பாக சொன்னால்

நெய்யில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நெய் அல்லது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்பது பெரும்பாலான இந்திய வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு  மூலப்பொருள் ஆகும். ஆனால் அதை சந்தையில் இருந்து வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் வீட்டிலேயே தூய்மையான மற்றும் புதிய நெய்யை செய்யலாம்.  இந்த செயல்முறை உண்மையில் சிறிது நேரம் மட்டுமே எடுக்கும். முறையும் மிகவும் எளிதானது மற்றும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

முழு கொழுப்பு பால்

தயிர்

ஐஸ் நீர்

ஐஸ் கட்டிகள்

செய்முறை:

* ஒரு கடாயில் பால் ஊற்றி நடுத்தர தீயில் சூடாக்கவும். பாலினை கொதி நிலைக்கு  கொண்டு வாருங்கள்.

* பால் பொங்கியதும் அடுப்பை அணைத்து, அதனை முழுவதுமாக குளிர்விக்க அனுமதிக்கவும்.

* இப்போது மெதுவாக பாலின் மேல் மிதக்கும் கிரீம் அல்லது பாலாடைரை  சேகரிக்கவும். காற்று உள்ளே செல்லாத ஒரு பாட்டிலிற்குள்  மாற்றவும். இதனை உறைய வைக்கவும்.

* இவ்வாறு தினமும் பாலாடை அல்லது கிரீமை சேகரித்து வையுங்கள். அடுத்த 15-20 நாட்களுக்கு அதை உறைய வைக்கும் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.

* 15-20 நாட்களுக்குப் பிறகு, உறைய வைத்த பாலாடையை எடுத்து, ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றுவதன் மூலம் அறை வெப்பநிலைக்கு வரட்டும்.

* கிரீம் உடன் தயிர் சேர்க்கவும் (மூன்று கப் கிரீம் அல்லது பாலாடைக்கு இரண்டு தேக்கரண்டி தயிர்) சேர்த்து நன்கு கலக்கவும்.

* கலவையை மூடி ஆறு முதல் எட்டு மணி நேரம் ஒதுக்கி வைக்கவும்.

* ஆறு முதல் எட்டு மணி நேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் உள்ள  கலவையை வெளியே எடுக்கவும். ஐஸ் நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.

* எலக்ட்ரிக் ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தி, வெள்ளை வெண்ணெய் மேலே மிதக்கும் வரை கலவையை கலக்கவும். பிளெண்டர் இல்லாத பட்சத்தில் அதனை ஒரு மூடி போட்ட டப்பாவில் ஊற்றி குலுக்கி வெண்ணெயை எடுக்கலாம். மெதுவாக வெள்ளை வெண்ணெய் சேகரித்து சிறிய பந்துகளாக வடிவமைத்து மற்றொரு கிண்ணத்தில் வைக்கவும்.

* இந்த வெள்ளை வெண்ணெய் பந்துகளை ஒரு கிண்ணத்தில் வைத்து  தண்ணீரில் கழுவவும். வடிகட்டி ஒரு தனி கிண்ணத்தில் வைக்கவும்.

* வெள்ளை வெண்ணெய் பந்துகளை ஒரு கடாயில் குறைந்த தீயில் சூடாக்கவும். 45 நிமிடங்கள் அல்லது பால் திடப்பொருள்கள் உருகும் வரை சமைக்கவும். அணைத்து, தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய்யை ஒரு மஸ்லின் துணி மூலம் வடிக்கவும். காற்றோட்டமில்லாத பாட்டிலில் நெய்யை ஊற்றவும். நீங்கள் இதை இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Views: - 15

0

0