கிரீமியான ஆரோக்கியமான காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி…???

13 April 2021, 10:51 pm
Quick Share

எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு தான். சரியான உணவு எடுப்பதன் மூலமாகவே ஒருவர் எளிதில் உடல் எடையை குறைத்து விடலாம். அந்த வகையில் உங்களுக்கு உதவக்கூடிய  ஆரோக்கியமான மற்றும் சுவையான காலிஃபிளவர் சூப் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

250 கிராம் காலிஃபிளவர்

ஒரு வெங்காயம்

2 பல் பூண்டு

½ தேக்கரண்டி கருப்பு மிளகு

தேவையான அளவு கல் உப்பு 

1 பிரியாணி இலை

100 மில்லி பால்

1 கரண்டி ஆலிவ் எண்ணெய்

10 கிராம் வறுத்த வேர்க்கடலை

செய்முறை:

*ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். கடாய் சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை சேர்க்கவும்.

*ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனை  நன்றாக வதக்கவும்.  

*இப்போது, ​கடாயில் சுத்தம் செய்த காலிஃபிளவரை சேர்த்து, அவற்றை நன்கு  வேக வைக்கவும்.

*இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, இந்த கலவையிலிருந்து பிரியாணி இலையை மட்டும் அகற்றவும். 

*மீதமுள்ள கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலவையை நன்றாக அரைக்கவும்.

*இப்போது இந்த கலவையை ஒரு  வாணலியில் ஊற்றிக்  கொள்ளுங்கள். 

*சிறிது பால் மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.

*அவ்வளவு தான்… சுவையான காலிஃபிளவர் சூப் தயார். கிண்ணத்தில் ஊற்றி சூடாக பரிமாறவும்.

காலிஃபிளவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

*நார்ச்சத்து – செரிமானத்திற்கு சிறந்தது

*வைட்டமின் C – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

*வைட்டமின் K – வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

*வைட்டமின் B5 – இரத்த அணுக்களின் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது

*வைட்டமின் B6 – இரத்தத்தின் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது

*ஃபோலேட்டுகள் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது

*பொட்டாசியம் – உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் அளவைத் தூண்ட உதவுகிறது

*மெக்னீசியம் – நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது

*மாங்கனீசு – வீக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது

*பாஸ்பரஸ் – சிறந்த எலும்பு அடர்த்திக்கு உதவுகிறது

மேலும், காலிஃப்ளவரில் உள்ள பிற நன்மைகள்:

1. இது ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக இருப்பதால், இது உங்கள் தோல், கண்கள் மற்றும் கூந்தலுக்கும் சிறந்தது.

2. இது கலோரிகளில் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் எடை குறைப்பதைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், இந்த சூப்பை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். கூடுதலாக, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.

3. காலிஃபிளவர் சல்போராபேனின் சிறந்த  ஆதாரங்களில் ஒன்றாகும்.  ஒரு ஆய்வின்படி, சல்போராபேன் புற்றுநோயிலிருந்து பெரும் பாதுகாப்பை வழங்குகிறது.

Views: - 21

0

0