கிரீமியான தக்காளி சாஸ் பாஸ்தா வீட்டில் செய்வது எப்படி???

30 January 2021, 6:12 pm
Tomato Pasta - Updatenews360
Quick Share

பீட்சா, பர்கர், பாஸ்தா எல்லாம் தற்போதைய தலைமுறை விரும்பும் உணவுகள் ஆகும். இது போன்ற உணவுகளை நாம் கடைகளில் சென்று தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதனை ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் கிரீமி தக்காளி சாஸ் பாஸ்தா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:-

தக்காளி விழுது அரைக்க மற்றும் பாஸ்தா வேக வைக்க:

பாஸ்தா- 1 கப்

உப்பு- 1/2 தேக்கரண்டி

தக்காளி- 3

தண்ணீர்

ஒயிட் சீஸ் சாஸ் செய்ய:

வெண்ணெய்- 20 கிராம்

மைதா மாவு- ஒரு தேக்கரண்டி

காய்த்து ஆற வைத்த பால்- ஒரு கப்

உப்பு- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள்

சீஸ் ஸ்லைஸ்- 2

பாஸ்தா செய்ய:

வெண்ணெய்- ஒரு தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய்- ஒரு தேக்கரண்டி

பூண்டு- ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 1

பச்சை குடை மிளகாய்- 1

சிவப்பு குடை மிளகாய்- 1

வேக வைத்த சோளம்- 1 கப்

அரைத்த தக்காளி விழுது

ஒயிட் சீஸ் சாஸ்

வீட்டில் செய்த தக்காளி கெட்சப்- 1 1/2 தேக்கரண்டி

சில்லி ஃபிளேக்ஸ்- ஒரு தேக்கரண்டி

இட்டாலியன் சீசனிங்- ஒரு தேக்கரண்டி 

ஆரிகனோ- 1/2 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி

துளசி இலை

செய்முறை:-

தக்காளி விழுது செய்ய:

*ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும்.

*தண்ணீர் கொதித்ததும் அதில் தக்காளி போட்டு வேக வையுங்கள்.

*தக்காளி வெந்த பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும். 

பாஸ்தா வேக வைக்க:

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

*தண்ணீரில் உப்பு போட்டு பாஸ்தாவை வேக வைக்கவும். 

*பாஸ்தா முக்கால் பாகம் வெந்ததும், அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை தனியாக எடுத்து வைக்கவும். 

ஒயிட் சாஸ் செய்ய:

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்க்கவும்.

*வெண்ணெய் உருகியதும் அதில் மைதா மாவை சேர்த்து கலக்கவும்.

*மைதா நிறம் மாறிய பின் அதில் காய்த்து ஆற வைத்த பாலை ஊற்றவும்.

*இப்போது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

*அடுத்து சீஸ் துண்டுகளை போட்டு, அவை கரையும் வரை கிளறவும். சீஸ் ஒயிட் சாஸ் இப்போது தயாராக உள்ளது.

பாஸ்தா செய்வதற்கு:

*கடாயில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும்.

*வெண்ணெய் உருகியதும் வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், வேக வைத்த சோளம் சேர்க்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை போடவும்.

*அடுத்து மிளகுத்தூள், உப்பு, இட்டாலியன் சீசனிங், சில்லி ஃபிளேக்ஸ், ஆரிகனோ, தக்காளி கெட்சப் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு கிளறவும்.

*பிறகு ஒயிட் சாஸ் மற்றும் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும்.

*கடைசியாக துளசி இலை மற்றும் துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.

Views: - 0

0

0