நோய்களை விரட்டும் ருசியான சத்து மாவு வீட்டில் செய்வது எப்படி…???

24 April 2021, 10:54 pm
Quick Share

COVID- 19 யில் இருந்து நம் உடலை காத்துக் கொள்ள நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். COVID-19 பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. சோர்வு அவற்றில் ஒன்று. COVID-19 சோர்வு அதிக இறப்புக்கு வழிவகுக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை  சமாளிக்க, நாம்  செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது. நம் உணவில் முட்டை மற்றும் பருப்பு வகைகளை தினசரி சேர்க்க வேண்டும். மேலும் ​​நம் உடலில் புரதத்தின் அளவை மேம்படுத்த ஒரு தனித்துவமான நுட்பம் தான் சத்து மாவு. இதனை வீட்டிலே எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

50 கிராம் பாதாம்

50 கிராம் பிஸ்தா

50 கிராம் முந்திரி

50 கிராம் ஆளி விதைகள்

50 கிராம் அக்ரூட் பருப்புகள்

100 கிராம் சணல் விதைகள்

50 கிராம் பூசணி விதைகள்

50 கிராம் வேர்க்கடலை

50 கிராம் எள்

50 கிராம் பைன் கொட்டைகள்

50 கிராம் உலர்ந்த தேங்காய்

செய்முறை: 

* தேங்காய் தவிர, அனைத்து நட்ஸ் மற்றும் விதைகளையும் உலர வறுக்கவும்.

* அவை அறை வெப்பநிலைக்கு வந்ததும், அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக தூளாக்கி கொள்ளவும். இப்போது, ​​இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

* பின்னர் உலர்ந்த தேங்காயை எடுத்து தனியாக அரைக்கவும்.

* இதை நட்ஸ் மற்றும் விதைகள் கலவையில் சேர்த்து, நன்றாக கலக்கவும்.

* அவ்வளவு தான்… சத்து மாவு தயாராக உள்ளது. இதனை காற்று உள்ளே செல்லாத ஒரு பாட்டிலில் போட்டு மூடி வையுங்கள்.

Views: - 163

0

0