கமகமன்னு கரம் மசாலா பொடி வீட்டில் செய்வது எப்படி…???

21 April 2021, 3:45 pm
Quick Share

இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஐந்து மசாலா  பொருட்கள் ஆகும். இவை  உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு மற்றும் காரம் என ஒரு சீரான கலவையாக அறியப்படுகிறது. இது சீன உணவுகளில் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வைத்து செய்யப்படும் மசாலா கரம் மசாலா என்று அழைக்கப்படுகிறது. 

இந்த வாசனை மிகுந்த  தூளை பல்வேறு உணவுகளில் சுவையை  சேர்க்க பயன்படுத்தலாம். இது கடைகளில் கிடைத்தாலும், வலுவான சுவைகளையும் ஃபிரஷான  நறுமணத்தையும் பெற இதை வீட்டிலேயே செய்ய வேண்டும். கரம் மசாலா தூளை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க… 

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் முதலில் மிளகு சேர்க்கவும். அதன் வாசனை வெளியே வரும்  வரை அதனை லேசாக  வறுக்கவும். நடுத்தர தீயில் சுமார் 3 நிமிடங்கள்  வறுத்தால் போதும்.

வறுத்த மிளகுடன் நட்சத்திர சோம்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். உங்களிடம் உரல் இருந்தால் அதனைக் கூட பயன்படுத்தலாம். 

ஒரு தனி கிண்ணத்தில், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கிராம்புகளை எடுத்து அரைத்து ஒரு தூள் தயாரிக்கவும்.

தூள் நைசாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். கரடுமுரடாக இருக்கக்கூடாது. இரண்டு துளையும் ஒன்றாக கலக்கவும்.

இந்த தூளை காற்று உள்ளே செல்ல முடியாத ஒரு பாட்டிலில் போட்டு வையுங்கள். நீங்கள் இதை கறி குழம்பு, பிரியாணி, புலாவ் மற்றும் பல உணவுகளில்  பயன்படுத்தலாம். இது  காரமான, நறுமணமுள்ள மற்றும் சுவையை அதிகரிக்க உதவும்.

Views: - 34

1

0