கோதுமை மாவுல கூட இடியாப்பம் செய்யலாமா…???

Author: Hemalatha Ramkumar
19 April 2023, 7:32 pm
Quick Share

Images are ©copyright to the authorized owners.

Quick Share

இடியாப்பம் என்றாலே அரிசி மாவு இடியாப்பம் தான் நம் நினைவுக்கு வரும். கோதுமை மாவு வைத்தும் இடியாப்பம் செய்யலாம். ஆனால் அது பிழிவதற்கு சற்று கடினமாக இருக்கும் என்பதால் பலர் அதை செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர். இந்த பதிவில் கோதுமை மாவு வைத்து சுலபமாக இடியாப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை:
*ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் இட்லி தட்டை வைத்து அதன் மீது காட்டன் துணி ஒன்றை போடவும்.

*இந்த காட்டன் துணியில் ஒரு கப் கோதுமை மாவை பரப்பி விடவும்.

*கோதுமை மாவை ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

*இப்பொழுது ஒரு சல்லடையை வைத்து வேக வைத்த கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.

*கட்டிகள் இருக்குமாயின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

*இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்து வைத்த கோதுமை மாவு மற்றும் அதனுடன் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளரவும்.

*இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

*இப்போது இடியாப்ப குழாயில் பிசைந்து வைத்த கோதுமை மாவை போட்டு இட்லி தட்டின் மீது இடியாப்பத்தை பிழியவும்.

*ஏற்கனவே நாம் கோதுமை மாவை ஐந்து நிமிடங்கள் வேக வைத்து விட்டதால் மீண்டும் 5 நிமிடங்கள் வேக வைத்தாலே போதும்.

*இப்போது சுவையான கோதுமை மாவு இடியாப்பம் தயார்.

Views: - 1649

0

0