சட்டென்று டிபனுக்கு சைட் டிஷ் செய்ய ஆசையா… இந்த கார சட்னி டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
14 March 2023, 7:37 pm
Quick Share

Images are © copyright to the authorised owners.

Quick Share

இட்லி, தோசைக்கு சட்டென்று ஒரு சைட் டிஷ் ரெடி பண்ண வேண்டும் என்று நினைத்தால், ஒரு செம ஈசியான ரெசிபி ஒன்று உள்ளது. வெறும் ஐந்தே நிமிடத்தில் தயாராகும் அனைவருக்கும் விருப்பமான கார சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 2
தக்காளி- 2
வர மிளகாய்- 5
பூண்டு- 2 பல்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:
*ஒரு மிக்ஸி ஜாரில் உரித்து ஒன்றும் பாதியுமாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து கொள்ளவும்.

*இதனோடு பூண்டு, வர மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.

*கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

*உளுத்தம்பருப்பு சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலை போட்டு தாளித்து ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

*பின்னர் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் மேலும் உப்பு சேர்த்து கிளறவும்.

*தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்தால் சுவையான கார சட்னி தயார்.

Views: - 332

1

0