ஒரு கப் இட்லி மாவு இருந்தால் போதும்…துளியும் கஷ்டம் இல்லாமல் மொறு மொறுப்பான மெது வடை தயார்!!!

Author: Hemalatha Ramkumar
24 March 2023, 7:38 pm
Quick Share

பலருக்கு மெது வடை என்றால் ரொம்ப ஃபேவரெட். ஆனால் அது அது செய்ய அதிக வேலை ஆகும் என்பதால், பலர் இதனை வீட்டில் செய்வதை தவிர்த்து விட்டு காசு கொடுத்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். இனி அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கப் இட்லி மாவு இருந்தால் போதும். மொறு மொறுப்பான மெது வடை தயார்.

இதனை செய்வதற்கு முதலில் ஒரு நாள் புளித்த இட்லி மாவை ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம். இதனை ஒரு கடாயில் ஊற்றி, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். மாவு கொதிக்க ஆரம்பிக்கும் போது 1/4 கப் அரிசி மாவு சேர்த்து கிளறவும். மாவில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் இப்போது சேர்த்த அரிசி மாவிற்கு மட்டும் அரை உப்பு சேர்த்து கொள்ளவும்.

மாவு கெட்டியாகி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இந்த மாவுடன் 10 மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி இஞ்சி துருவல், ஒரு பொடியாக நறுக்கிய வெங்காயம், 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது கையில் எண்ணெய் தடவி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் உட்புறம் நன்கு வெந்து சாஃப்டாகவும் இருக்கும்.

Views: - 252

1

0