முள்ளங்கி அல்வா: இன்னும் கொடுன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
28 May 2022, 3:21 pm
Quick Share

முள்ளங்கியை வைத்து பல ரெசிபிகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்வீட் ரெசிபியான முள்ளங்கி அல்வா தான். அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை முள்ளங்கி – 1/4 கிலோ

சர்க்கரை – 1/2 கிலோ

பால் – 1 கப்

முந்திரி – 10

வெள்ளரி விதை – தேவையான அளவு

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

நெய் – 7 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*முதலில் முள்ளங்கியை கழுவி சுத்தம் செய்து துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, வெள்ளரி விதைகளை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அதே வாணலியில் துருவி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

*முள்ளங்கி நன்கு வதங்கியதும் பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

*பின்பு இடை இடையே நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

*அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, வெள்ளரி விதையை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

* இப்போது சுவையான, ஆரோக்கியமான முள்ளங்கி அல்வா ரெடி.

Views: - 600

0

0