நாவூறும் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?

18 March 2020, 2:28 pm
how-to-make-poosanikai-halwa updatenews360
Quick Share

நிறைய  பழங்கள்  மற்றும் காய்களை  வைத்து அல்வா செய்திருப்போம். சரி  இன்று பூசணிக்காயை வைத்து அல்வா செய்வது  எப்படி என இதில் காண்போம்.

பூசணிக்காய்  உண்பதால் ஏற்படும்   நன்மைகள்: 

how-to-make-poosanikai-halwa updatenews360
 • பூசணியின்  முற்றிய காயை  சமைத்து உண்பதால்  தலைவலி குணப்படுத்திவிடும். அதுமட்டுமில்லாமல்  நெஞ்சு சளி மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய  உதவுகின்றது.
 • வயிற்றில்  உள்ள புழுக்களை  இது கொன்றுவிடும்.
 • வெண்பூசணியின்  விதையிலிருந்து பல  விதமான வேதிப் பொருட்கள்  பிரித்தெடுக்கப்படுகின்றது.
 • தோல்   நோய்களை   குணப்படுத்த   உதவுகின்றது.
 • உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து  போன்ற உடல் உபாதைகள் இருந்தால் இந்த பூசணியை சமைத்து உண்டு  வரலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விரைவில் மறைந்துவிடும்.
 • எலும்புருக்கி  நோயை குணப்படுத்தும்  சக்தி பூசணியில் உள்ளது.
 • உடல்  வலியால்  அவதிப்படுபவர்கள்  பூசணியை சமைத்து உண்டு  வந்தால், உடல் வலி வரைவில்  குணமடையும்.
 •  இது  குளிர்ச்சியான  காய் என்பதால் இதை  அடிக்கடி சமைத்து உண்ணலாம்.  இதை குழம்பாகவோ, கூட்டாகவோ, பொறியலாகவோ   செய்து உண்ணலாம்.  
 • இது   சிறுநீர்   பெருக்கத்தை   அதிகரிக்க உதவுகின்றது.
 • உடலுக்கு  குளிர்ச்சியை   தருவது மட்டுமில்லாமல், சிறுநீரகத்தில்   கற்கள் உள்ளவர்கள் இதை தொடர்ந்து உண்டு வருவதால், சிறுநீரக  கற்கள் விரைவில் கரைந்து விடும்.
 • பூசணிக்காயைத்தான்  வெள்ளைப்பூசணி என அழைப்பார்கள்.  சரி பூசணியை வைத்து அல்வா செய்வது  எப்படி என இதில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 300 கிராம்

பால் – 500 மி.லிட்டர்

சர்க்கரை – 400 கிராம்

முந்திரி – 15

திராட்சை – 15

பாதாம் – 15

நெய் – 250 கிராம்

ஏலக்காய் – அரை ஸ்பூன்

how-to-make-poosanikai-halwa updatenews360

செய்முறை :

 • பூசணிக்காயின்  தோலை சீவி எடுத்துக் கொள்ளவும்.  பின்பு அதன் உட்பகுதியை நன்றாக துருவி  அதன் சாறை பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ள  வேண்டும்.
 • பசும்பாலை  தனியாக காய்ச்சி  எடுத்துக் கொள்ளவும்.
 • பாதாமை பொடியாக செய்து  எடுத்துக் வைத்துக்கொள்ளுங்கள்.
 • வாணலியில்  நெய் சேர்த்து  அதனுடன் பூசணிச் சக்கையை  சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
 • அதனுடன் மிதமான  சூட்டில் உள்ள பாலை  சேர்த்து கிளறவும். அடுப்பை  மெதுவாக வைத்து இந்த கலவையை கிளறிக்  கொண்டே இருங்கள். அடிக்கடி இடையில் நெய்  சேர்த்துக் கொள்ளவும்.
 • அதன்பின்பு   தேவையான அளவு   சர்க்கரை மற்றும்   பாலை சேர்க்க வேண்டும்.  இதை நன்றாக கிளறி விடவும். அடுப்பை  மெதுவாக வைத்து வேக விடுங்கள்,
 • மற்றொரு  வாணலியில் சிறிதளவு  நெய் ஊற்றி திராட்சை  மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.  இதை தனியாக எடுத்து வைக்கவும்.
 • பூசணிக்   கலவை அல்வா  பதத்திற்கு வந்தவுடன், வாணலியில்  ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும். அப்போது  அதனுடன் வறுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரி  மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றை தூவி விட வேண்டும். அதனுடன் ஏலக்காய்த் தூளை  சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இதை நன்றாக கிளறியவுடன் அல்வாவை இறக்கிக்   கொள்ளலாம்.
 • ஆறியவுடன்   எடுத்து உண்ணுங்கள், நல்ல   சுவையுடன் இருக்கும்.
 • இனிப்பான, நாவூறும்   பூசணிக்காய் அல்வா தயார். நீங்களும்  இதை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்  தோழிகளே!
how-to-make-poosanikai-halwa updatenews360