இனிப்பான பொட்டுக்கடலை பர்பி செய்வது எப்படி?

17 March 2020, 2:46 pm
sweet kadalai parfi updatenews360
Quick Share

பொட்டுக்கடலை   பர்பி மிகவும்  எளிமையாக தயரிக்கக்   கூடிய ஒரு இனிப்பு பண்டமாகும்.  இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. உங்களுக்கு   நேரம் கிடைக்கும் போது இந்த உணவை நீங்கள் சமைத்துப்   பார்க்கலாம். இதை ப்ரோடீன் பார் என்றும்   அழைப்பார்கள். சரி இந்த  பொட்டுக்கடலை பர்பியை எப்படி   செய்வது என இதில் பார்க்கலாம்.

sweet kadalai parfi updatenews360

பொட்டுக்கடலையில்  உள்ள நன்மைகள்:

 • இதில்  நார்ச்சத்து  அதிகம் உள்ளதால்   செரிமானக் கோளாறுகளை  சரிசெய்ய உதவுகின்றது.
 • குழந்தைகளுக்கு  இதை தருவதால் ஆற்றலை  அதிகரிக்க செய்கின்றது.
 • பெண்களுக்கு  ஹார்மோன்கள் சுரக்கும்  அளவை சமன் செய்கின்றது.
 • ரத்தத்தில்  உள்ள சர்க்கரையின் அளவை  சமமாக வைக்க உதவுகின்றது.
 • பொட்டுக்கடலையில் போலேட் , காப்பர் , பாஸ்போரஸ், மாங்கனீசு  போன்ற சத்துக்கள் உள்ளதால், இதயத்தில் உள்ள  கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை  ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
sweet kadalai parfi updatenews360

பொட்டுக்கடலை பர்பி செய்ய தேவையான   பொருட்கள் :

துவரம் பருப்பு – 200 கிராம் தேவையான அளவு

நெய் – 150 கிராம் தேவையான அளவு 

கரும்பு சர்க்கரை – 150 கிராம் தேவையான அளவு 

தண்ணீர் – சிறிதளவு

அலங்கரிக்க:

பாதாம் – 6 

கருப்பு ஏலக்காய் – 1 தேக்கரண்டி

குங்குமப்பூ – 1 தேக்கரண்டி

sweet kadalai parfi updatenews360

செய்முறை:

 • அடுப்பில்  வாணலியை வைத்து அதில் பொட்டுக்கடலை சேர்த்து  வறுத்துக் கொள்ளவேண்டும். அடுப்பை  மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.  பின்பு அதை ஒருதட்டில் கொட்டி ஆற வையுங்கள்.
 • இது  ஆறிய   பின்பு அதை   மிக்சியில் போட்டு  நன்கு அரைக்க வேண்டும்.
 • வாணலியில்  நெய் ஊற்றி மிதமான  சூட்டில் அடுப்பை வைக்கவும். பின்பு  அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை  மாவை சேர்த்து வணக்கவும். சிறிதளவு தண்ணீர்  சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு வணக்கிக் கொண்டே  இருக்கவும்.
 • மாவு  கெட்டியாக  மாறும் வரை  கிளற வேண்டும்.  பின்பு கெட்டியானவுடன்  அதை இறக்கிக் கொள்ளலாம்.
 • நெய்  தடவிய ஒரு  பாத்திரத்தில்  இதை கொட்ட வேண்டும்.   இதன் மேலே பாதாம்,  கருப்பு ஏலக்காய், குங்குமப்பூ  ஆகியவற்றை அலங்காரத்திற்க்காக தூவி விடலாம். சிறிது  நேரம் வைத்திருந்தால்   மாவு கெட்டியாக மாறிவிடும்.
 • பின்பு  இதை சதுரமாக  வெட்டி தனித்தனியாக  எடுத்து வைக்க வேண்டும். சுவையான  கடலை பர்பி தயார். குழந்தைகளுக்கு பிடித்தமான  ஒரு ரெசிபியாக இது இருக்கும்.