இறால் பொலிச்சது: அட அட அட… இந்த மாதிரி ஒரு அசைவ உணவு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
2 November 2024, 7:47 pm

நிச்சயமாக நீங்கள் மீன் பொலிச்சது சாப்பிட்டிருக்க வேண்டும். பலருக்கு இது மிகவும் ஃபேவரட்டான ஒரு டிஷ். அதிலும் இந்த ரெசிபியை இறால்களை வைத்து செய்தால் எப்படி இருக்கும்? இந்த பதிவில் அட்டகாசமான இறால் பொலிச்சது எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இது செய்வதற்கு நமக்கு அதிக பொறுமை தேவை. ஆனால் சுவை அட்டகாசமானதாக இருக்கும். ஒரு முறை செய்துவிட்டால் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். 

தேவையான பொருட்கள்:

இறால்

வெங்காயம் 

தக்காளி 

கறிவேப்பிலை 

பச்சை மிளகாய்

எலுமிச்சம் பழச்சாறு

மிளகாய் தூள் 

மஞ்சள் தூள் 

கரம் மசாலா 

மிளகுத்தூள் 

எண்ணெய் 

இஞ்சி பூண்டு விழுது 

உப்பு

செய்முறை

முதலில் 300 கிராம் அளவு இறாலை மஞ்சத்தூள் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளலாம். இதில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து ஊற வைத்துள்ள இறால்களை எண்ணெய் ஊற்றி ஷேலோ ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

இதில் மசாலாக்களின் பச்சை வாசனை போன உடன் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீர் ஓரளவு வற்றி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் நாம் வறுத்து வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்த்து மசாலாக்களோடு கோட்டிங் ஆகும்படி நன்றாக கிளறி கொள்ளவும். 

இதையும் படிக்கலாமே: மண் பாத்திர சமையல்: இந்த ஒரு விஷயத்த மாற்றினா போதும்… ஆரோக்கியம் உங்கள் கையில்!!!

2 நிமிடங்கள் வேகவைத்த பிறகு ஒரு வாழை இலையை நெருப்பில் வாட்டி அதன் மீது நாம் செய்து வைத்துள்ள இறால் தொக்கை வைத்து வாழை நார் வைத்து மூடவும். இதனை தோசைக் கல்லில் வைத்து இரண்டு பக்கங்களும் 2-3 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் சுவையான இறால் பொலிச்சது தயார்.

  • Jason Sanjay in Vidaamuyarchi Audio Launch விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
  • Views: - 443

    0

    0